பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

விஜயலட்சுமி பண்டிட்


ஏதோ பெயர் பண்ணி, தண்டனை கொடுக்க வேண்டியது உடனடியாக அதை அமுல் நடத்தி விடுவது-இதுதான் அந்நாளைய ஆங்கிலேயர் ஆட்சி முறையாக இருந்தது. மோதிலாலின் பண்ணனும், பிறரும் பாதை ஓரத்தில் நின்ற மரங்களில் தொங்கி மரணமடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். பெரிய நேரு ஆங்கிலேயருடன் பேசிக் காலதாமதம்ஏற்படுத்தி நின்றார். நல்லவளையாக, அவரை நன்கு அறிந்திருந்த பிரமுகர் ஒருவர் அவ்வழியாக வந்தார். அவர் உண்மையை எடுத்துச்சொல்லி எல்லாரையும் காப்பாற்றினார்.

ஜவஹர்லால் நேருவின் அத்தைதான் வெள்ளைக்காரப் பெண்போல் காட்சியளித்த சிறுமி. மோதிலால் நேரு ஐரோப்பிய முறைப்படியே ஆடைகள் அணிந்தார். அவரது பழக்கவழக்கங்களும் மேல்நாட்டு நாகரீகத்தை ஒட்டியே அமைந்தன. அவர் தனது குழந்தைகளையும் அந்த முறைப்படியே வளர்த்து வந்தார்.

ஜவஹர்லாலுக்குக் கல்வி புகட்ட ஆங்கிலேயர்களை ஆசிரியர்களாக நியமித்தது போலவே, விஜயலட்சுமிக்கு ஆசிரியையாக பிரிட்டிஷ் மங்கை ஒருத்தியை அமர்த்தினார்.

விஜயலட்சுமியை, 'சொரூபா' என்றே அழைத்து வந்தார்கள். அழகிய சிறுமியாக விளங்கிய அவளிடம் எல்லோரும் அன்பும் ஆசையும் காட்டி வந்தார்கள். செல்வர்கள்வீட்டுக் குழந்தைகள் அளவுக்கு அதிகமான பாராட்டுகளையும் பெறுவது சகஜம்.அதிலும் ராஜா மாதிரி வாழ்ந்த மோதிலாலுக்கு