பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

விஜயலட்சுமி பண்டிட்



ஹோலி, ஜன்மாஷ்டமி, தஸரா, ராமலீலா போன்ற பண்டிகைகள் 'ஆனந்த பவனத்'தில் ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விசேஷ தினங்கள் சகோதரிகளுக்கு மிகுந்த உற்சாகம் அளித்தன என்று சொல்லவும் வேண்டுமோ?

அக் காலத்தில் இன்று போல் சினிமா முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. அபூர்வமாக என்றாவது ஒரு நாள் ஏதோ ஒரு படத்தைப் பார்த்துவரத் தன் புதல்வியருக்கு அனுமதி அளிப்பது மோதிலாலின் வழக்கமாக அமைந்தது. ஆனால் அடிக்கடி சர்க்கஸ் வேடிக்கை சென்று வர அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஜவஹர்லால் நேருவுக்கு அற்புதமாகக் கதைகள் சொல்லி உணர்வும் மகிழ்வும் ஊட்டிய முன்ஷி முபாரக் அலி எனும் பெரியார் சொரூபாவுக்கும் கதைகள் சொல்லிக் களிப்பித்தார். குமாரி கிருஷ்ணாவுக்கும் இனிய கதைகள் கூறிஅவள் மதிப்பைச் சம்பாதித்தார். ஆறடிஉயரம் வளர்க்கிருந்த ஆஜானுபாகு அவர். கம்பீரமானதோற்றமும், வசீகர் முகத்துக்குத் தனி வனப்பு தந்த நீள் தாடியும் கொண்ட பெரியார் அவர். அவரை எல்லோரும் 'முன்ஷிஜி' என்றே அன்பாக அழைத்துப் போற்றி வந்தனர். குழந்தைகளுக்கு வீரக் கதைகளும் சரித்திரக் கதைகளும் சொல்வதில் அவர் அதிக உற்சாகம் காட்டி வந்தார். ஜவாஹரிடம் அவருக்கு அளவற்ற அன்பு உண்டு. நம் நேருவுக்கு அவர் மீது எல்லையற்ற பிரியமும் மதிப்பும் உண்டு 1917-ல் புற்றுநோய் கண்டு பல மாத காலம் கஷ்டப்பட்டார். முன்ஷிஜீ ஆயினும் ஜவாஹருக்குத் குழந்தை பிறந்து, அதைக் கண்டு