பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

19


மகிழ்ந்த பிறகே சாவேன்' என்று உறுதி கொண்டிருந் தார் அவர் மரணத்தோடு போராடி உயிரைப்பிடித்து வைத்திருந்தார். நம் நேருவுக்கு இந்திரா பிறந்ததும், அக் குழந்தையைக் கண்டு களிபேருவகை அடைந்தார் அப் பெரியார். அதன் பின் சில நாட்களிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. அவர் பிரிவைத் தனக்கு வந்த பெரு கஷ்டமாகவே கருதினர் நேரு குடும்பத்தினர் ஒவ் வொருவரும்.

ராணி நேருவுக்குத் தன் அருமை மகன் ஜவாஹர் பேரில் தான் பாசம் அதிகமிருந்தது. அது அவளது பேச்சில் சதா புலப்பட்டது. ஜவாஹர் இங்கிலாந்தில் வசித்து வந்த போதிலும், அவருடைய தாய் தன் மகனைப் பற்றிய நினைப்பில் அதிக இன்பம் கண்டு வந்தாள். அது 'கடைக்குட்டி’யான கிருஷ்ணாவுக்கு ஆத்திரம், வெறுப்பு, பொறாமை ஆகியவற்றையே வளர்த்தது.

உறவினர்களும் பெரியவர்களும் நிறைந்திருந்த அந்த மாளிகையில் அக்காளும் தங்கையும் தான் தோழி கள் போல் பழகிப் பொழுது போக்கி வந்தனர். தந்தையை அவர்கள் எப்பொழுதாவது தான் கண்டு பேசிப் பழக முடிந்தது. தாயுடனும் அடிக்கடி குலவி மகிழ முடிந்ததில்லை. ஆசிரியை மிஸ் ஹூப்பர்தான் சகோதரிகளுக்குத் தாய் போலவும் கண்காணிப்பாளாரா கவும் இருந்தாள்.

இங்கிலாந்தில் சட்டக்கல்வி பயின்று தேர்ந்த ஜவாஹர்லால் நேரு, ஏழு வருஷங்களுக்குப் பிறகு 1912-ம் ஆண்டில் இந்தியா திரும்பினார். அவர் வருகிறார்.