பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்ககை வரலாறு

33


 கிருஷ்ணா அலட்சியமாகச் சொன்னாள்; 'எல்லாம் எனக்கு ஒண்ணேதான்! ஆனால் அவளைச் சந்திக்க நீங்கள் இவ்வளவு தூரம் பயணப்பட்டு வருவானேன் என்பது தான் என் கேள்வி'.

ரஞ்சித் சிரித்தார். 'சின்னப் பெண்ணே! உன்னிடம் ஒரு சங்கதி சொல்வேன். அதை ரகசியமாக வைத்துக்கொள்ள உன்னால் முடியுமோ?' என்றார்.

'ஓ! எனக்குப் பதிமூன்றுவயசு ஆகிவிட்டது தெரியுமா? நான் பெரியவளாக்கும்!' என்றாள் தங்கச்சி.

அடேயப்பா. ரொம்ப ஜாஸ்தியான வயசுதான் அது. .நீ பெரியவள் தான். அது சரி. விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். அதை உன்னோடு ரகசியமாக வைத்துக் கொள்ள வேணும். நான் வந்து சொரூபாவை கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன். உங்க அப்பா அதற்குச் சம்மதிப்பாரா?

அவர் அவ்விதம் சொன்னதும் கிருஷ்ணாவின் உள்ளம் துள்ளிக் குதித்தது, 'ஆகா! அக்காளை மணந்து கொள்ளவா? எவ்வளவு அற்புதம்! எவ்வளவு மனோகரமாக இருக்கிறது. இந்த விஷயம்! நீங்கள் அவளை எப்ப சந்தித்தீர்கள்? எங்கே கண்டீர்கள்? எப்போது இந்த முடிவுக்கு வந்தீர்கள்? எனக்கு எவ்வளவு பரவசம் ஏற்படுகிறது, தெரியுமா? நீங்கள் அத்தானாக வருவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்’ என்று 'பொரிந்து கொட்டினாள்' விஜயலஷ்மியின் தங்கை.

'வந்தனம். இளைய ராணி அங்கீகரித்த பிறகு எனக்குக் கவலையே கிடையாது. மற்றுமுள்ள அனைவ-