பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்க்கை வரலாறு

35


புரட்சி வெடித்து விடும் என்று அவர்கள் அஞ்சினர். தங்கள் வீடுகளில் வேலை பார்த்து வந்த இந்தியர் மீது கூடச் சந்தேகம் கொண்டு பீதியுடன் பொழுது போக்கி ணார்கள். தங்களது கோட்டுப் பைகளில் ரிவால்வரைப் பதுக்கி வைத்து அலைந்தார்கள். திடீரென்று பயங்கர நிகழ்ச்சி ஏதாவது வெடிக்குமானல், வெள்ளையர்கள் பம்மிப் பதுங்குவதற்கு வசதியாக அலகாபாத் கோட்டை தக்க பாதுகாப்புகளுடன் தயார் படுத்தப் பெற்றிருந்தது.

வெள்ளையரின் உள்ளக் கலக்கம் அர்த்தமற்றது காரணமற்றதுதான். அவ்வளவு தூரம் - மருண்டு போயிருந்தார்கள் அவர்கள். அவர்களுடைய தொடை நடுக்கத்துக்கு முக்கியமான அடிப்படை விஜயலக்ஷ்மி யின் கலியாணத்துக்காகக் குறிக்கப்பட்டிருந்த நல்ல நாள் தான். -

பஞ்சாங்கத்தைப் பார்த்துப் பெரியோர் நிச்சயித்த புண்ணிய நாள் அது. ஆனல் வெள்ளையரின் எண்ணத் திலே 1857-ம் ஆண்டு மே மாதத்தின் பத்தாம் நாள் தான் நினைவுக் கனலாகச் சுட்டது! அத் தினம் தான் மீரத்தில் முதல் இந்தியப் புரட்சி நடைபெற்றது.

அந் நினைவு நாளைக் கொண்டாடும் முறையிலே மற்றுமோர் புரட்சிக்குத் தயாராகிறார்கள் காங்கிரஸ் காரர்கள் என்று வெள்ளையர் கருதினர். நேரு மகளுக்குக் கலியாணம் என்பது ஆங்கிலேயர் கண்ணிலே மண்ணைத் தூவுவதற்காக என்று நினைத்து விட்டார்கள் அவர் கள், அந்தோ பரிதாபம் !