பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

விஜயலக்ஷ்மி பண்டிட்

 கலியானம் நிகழ்ந்த கொஞ்ச காலத்திற்குள்ளாக, ரஞ்சித் பண்டிட் பாரிஸ்டர் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, அரசியலில் தீவிரமாகக் கலந்து விட்டார். கல்கத்தா நகரை விடுத்து, அலகாபாத் ஆனந்த பவனத்தில்வாசிக்கவந்து சேர்ந்தார்.

அவர்கிருஷ்ணுவுக்குத் தோழனாகவும், சகோதரன் போலவும் ஆசிரியனாகவும், விளங்கினர். கிருஷ்ணாவைப் பொறுத்தவரையில் ஜவஹர் அதிசயித்து போற்றுவதற்குரிய அண்ணாகத்தான் இருந்தார் ரஞ்சித் பண்டிட் தான் அவர் மனதிற்கு பிடித்த நல்ல சகோதரன்.அந்த லட்சிய சகோதரன் தான் கிருஷ்ணாவுக்கு டென்னிஸ் நீச்சல் நடனம் போன்றவைகளை கற்றுக் கொடுத்தார்.

ரஞ்சித் அரசியல் உலகத்தில் சிக்கிக்கொண்டது சரியல்லஎன்பதேஎன்அபிப்பிராயம்.அரசியல்வாதிகளுக்கு தேவையான தகுதிகளும் திறமைகளும் அவரிடம் கிடையாது.அவர் மிகவும் பிரபலமான வக்கிலாக முன்னுக்கு வந்திருக்க முடியும்.அதற்கு வேண்டிய கூரிய அறிவும் நுணுகி ஆராயும் உள்ளமும் அவரிடம் இருந்தது.அவர் சிறந்த கலைஞராகவோ தேர்ந்த விளையாட்டு நிபுணராகவோ வளர்ந்திருக்க முடியும்.ஆனால் அரசியலுக்காக அவர் அனைத்தையும் துறந்து விட்டார்.என்று கிருஷ்ணா எழுதி இருக்கிறாள்.

அத்தியாயம் 5

காலவேகம் நாட்டில் புரட்சிகரமான மாறுதல் களை ஏற்படுத்தியது போலவே, நேரு குடும்பத்திலும் பெரியபெரிய மாற்றங்களே உண்டாக்கியது.