பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்க்கை வரலாறு

37


 சில பெரிய வீடுகளில் தோட்டத்திலோ, எங்கோ நல்ல பாம்பு கரந்து உறையும். அதை மனைப் பாம்பு என்றும், அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித மான தீங்கும் வராது என்றும், நம்புவது மக்களின் இயல்பு. அதைக் கொல்வது பாபம் மாத்திரமல்ல ; கெட்ட காலத்துக்கு அறிகுறியுமாகும் என்று சொல்வர்.

ஆனந்த பவனத்தின் பெரிய தோட்டத்தில் சிறு சிறுறு வீடுகள் பல நின்றன. கரி, விறகு, மரக்கட்டைகள் முதலிய பலரகமான பொருள்களைப் போட்டு பூட்டி வைக்கவே அவ்வீடுகள் பயன் பட்டன. மரக்கட்டைகள் நிறைந்து கிடந்த சிறு வீடு ஒன்றில் பெரிய தொரு கிருஷ்ணசர்ப்பம் வசித்து வந்தது. ரொம்ப காலமாக அது அங்கு குடியிருந்தது. ஒரு தடவை கூட அது எவ ருக்கும் தீமை புரிந்தது இல்லே. யாரும் அதற்குத் திங்கு எண்ணியதுமில்லை. வேலைக்காரர்கள் அச்சம் இல்லாமல் அங்கு போவார்கள், வருவார்கள். நடுராத்திரியில் கூட அங்கே சென்று வருவது வழக்கம். பாம்பு இருக் கிறதே! என்று ஒருவர் கூடப் பயந்தது கிடையாது. "மனைப்பாம்பு. இது இருக்கிறவரையில் வீட்டுக்கோ, குடும்பத்துக்கோ எவ்விதக் குறையும் இல்லை. செல்வமும் சிறப்பும் பொங்கிப் பெருகும் என்றே பலரும் பேசி வந்தனர்.

1930-ம் வருஷம், மோதிலால் நேரு தொழிலைத் துறப்பதற்குக் கொஞ்ச காலத்துக்கு முந்தி, புதிதாகச் சேர்ந்திருந்த வேலைக்காரன் ஒருவன் பாம்பைக் கண்டு பயந்து போனான். சாயங்கால நேரம். பெரிய பாம்பு அது. அவனது திகில் வளர்ந்ததே தவிரக் குறையவில்லை,