பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

விஜயலக்ஷ்மி பண்டிட்


மாதம்' என்பது போல, வீட்டில் கொஞ்ச நாள் ஜெயிலில் ரொம்ப காலம் என்ற தன்மையில் வாழ நேரிட்டது.

விஜயலக்ஷ்மி தன் கருத்துக்கு இசைந்த கணவன் ரஞ்சித் பண்டிட்டுடன் இல்வாழ்க்கையை இனிது நடத்திவந்தாள். கவிதாரசனையும், அழகிய இடங்களில் சுற்றும்ஆர்வமும் அவ்விருவருக்கும் இயல்பாக அமைந்திருந்தன.கல்யாணமானதிலிருந்தே அவர்கள் மன உல்லாசத்துக்காகவும் ஒய்வு நாடியும் ஐரோப்பாவில் யாத்திரை செய்யவேண்டும் என்ற ஆசையை வளர்த்து வந்தனர். ஆனாலும் அந்த என்னம்செயலாகக் கணிவதற்குச் சில வருஷங்கள் பிடித்தது.

1926ம்வருஷம் மார்ச்மாத ஆரம்பத்தில் ஜவஹர்லால் நேருவும் அவர் மனைவி கமலாவும், குழந்தை இந்திராவுடன் ஐரோப்பியயாத்திரைதொடங்கினர். பல மாதங்களாகவே கமலா நேரு நோயினால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவளது சிகிச்சைக்காக ஸ்விட்ஸர்லாந்து செல்லவேண்டியது அவசியமாயிற்று.

பம்பாயிலிருந்து வேனிஸ் நகருக்கு அவர்கள் கப்பல் பிரயாணம் கிளம்பியபோது விஜயலட்சுமியும் அவர் கணவர் ரஞ்சித் பண்டிட்டும் உடன் சென்றனர்.

ஜவாஹர்லால் நேரு ஐரோப்பாவில் பல மாதங்கள் தங்க நேர்ந்தது. விஜயலக்ஷ்மியும் ரஞ்சித பண்டிட்டும் கொஞ்ச காலம் அங்கு தங்கி, பல காடுகளிலும் யாத்திரை செய்து, நல்ல அனுபவம் பெற்று இந்தியா திரும்பினர்.