பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

43


குடும்பத்திலும், நாட்டிலும் நிகழ்ந்து வந்த மாறுதல்கள் விஜயலக்ஷ்மியின் உள்ளத்திலும் கிளர்ச்சி ஏற்படுத்தி வந்தன. சகோதரனின் தீவிரமும், தங்தையின் செயல்களும் அவள் இதயத்திலே தேசீயக் கனலைக் கொழுந்து விட்டு எரியத் துாண்டின. சாந்திஜீயின் ஒளி அவளையும் இழுத்தது. வாழ்க்கையில் எதிர்ப்பட்ட எல்லா மாறுதல்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள் அவள்.

வெகுகாலம் வரை விஜயலக்ஷ்மி ஆங்கிலேய மோஸ்தரிலேயே ஆடைகள் அணிந்து பழகியவள். பிறகு மென்மையான பட்டாடைகள் கட்டி உல்லாச வாழ்வு வாழ்ந்தவள் . தேசிய உணர்வு ஏற்பட்டதும் கதருடையை உள்ளத்து உவகையுடன் ஏற்றுக் கொண்டாள். அக்காலத்தில் 'கதர்ப்பட்டு' என்று செல்லப் பெற்ற விலை உயர்ந்த துணிகூட மிகவும் கரடுமுரடாகவும் கனமுள்ளதாகவும் தான் இருந்தது. அத்துணியைக் கட்டிப் பழக்கம் படிகிற வரை. நேரு குடும்பத்தினர் வெகு சிரமம் அனுபவிக்கத்தான் செய்தனர்.

இத்தகைய மகத்தான மாறுதல்களை எல்லாம் மோதிலாலின் மனைவி ராணி நேரு பொறுமையுடனும் புன்னகையுடனும் சகித்து வந்தாள். பாரதப் பெண்மையின் பரிபூரண பிம்பம் அவள்.கணவன் காட்டிய வழியே தனது வாழ்வு என மதித்து, தன் இதய உணர்ச் சிகளையும் எண்ணத் துடிப்புகளையும் தனது உள்௧ளத்தினுள்ளேயே ஒடுக்கிவிடும் பண்பு பெற்ற உத்தமி அவள். கால வேகம் ஏற்படுத்திய எத்தனேயோ மாற்றங்கள் அவளுக்கு உகந்தனவாகத் தோன்றவில்லை. நாகரிகம்