பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

45


கள், இந்தியாவின் வீரநாயகர்கள் விராங்கன்கள் பற்றிய கதைகள் பலவற்றையும் சொல்லி, குமரியர் உள்ளத்தில் வீர உணர்வைப் பயிரிட்டிருந்தாள் அவள். ராணி நேருவை விட, பத்து வயது மூத்தவள் பீபி அம்மா. 'பழங்காலத்து மனுஷி'. ஆகவே, புதுமைப் பெண்களின் போக்கு அவளுக்கு மனக்கஷ்டம் கொடுத்ததில் வியப்பில்லை. விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் புதுமை மோகம் அதிகம் கொள்ளாமல், புராதன தர்மங்களை அனுஷ்டித்திருக்கலாம் என்று பீபி அம்மாவும், ராணி நேருவும் அடிக்கடி ஆசைப்பட்டது உண்டு. ஆனால் கால ஓட்டத்தின் முன்னே அவர்கள் எண்ணம் ஓங்கி நிற்க முடியுமா என்ன! காலவேகம் ராணி நேருவை மகத்தான வீரநாயகியாக மாற்றிவிடும் வல்லமை பெற்றிருந்தது. அதைக் கண்டு அவளது கணவரும், மைந்தனும், பெண்களும் வியக்க வேண்டியதாயிற்று.

இவ்வித வீரத் தாய்மார்களிடையே வளர்ந்து உளப்பண்பு பெற்ற விஜயலக்ஷ்மியும் காலத்தின் அழைப்பை ஏற்று, தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான பங்கு கொள்ள முன்வந்தது இயல்பு தானே ?

அத்தியாயம் 7

1928-ம் ஆண்டில் மோதிலால் நேரு ஐரோப்பாவில் ஒய்வு பெற்றுக்கொண்டிருந்தார். கமலாவின் சிகிச்சைக்காக அங்கு சென்றிருந்த ஜவாஹரும், கிருஷ்ணாவும் 1927 டிசம்பரில் இந்தியாவுக்குத் திரும்பி விட்டதால்