பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

47


குடியானவர்களின் கிளர்ச்சிகள், இளைஞரின் இயக்கங்கள், சட்ட மறுப்பு வேலைகளில் எல்லாம் உயிர்மூச்சு காட்டியது. காங்கிரசின் பலம் பன்மடங்கு பெருகி ஓங்கியது.

எங்கும் மகாநாடுகள்ː உறுதிப் பிரதிக்ஞைகள் பொதுநலப் பணிகள், எல்லோரும் தொண்டர்கள் இந்த நிலை இந்திய நாட்டின் பரப்பு முழுவதிலும் வியா்பித்திருந்தது. தொழில்களைத் துறந்தார்கள் பலர். பட்டங்களைத் துறந்தார்கள் பலர். பள்ளிப் படிப்பைத் துறந்தார்கள் மாணவ மாணவிகளில் எண்ணற்றோர். கிராமம் கிராமமாகச் சென்று தேசிய உணர்வை வளர்த்தார்கள். சுதந்திரம் நமது பிறப்புரிமை ; அதை அடைந்தே தீருவோம்' என்ற உறுதி எல்லோரது இதய ஒலியாகவும் மாறும்படி பணியாற்றினர் தொண்டர்கள். நம் நேருவும், அவர் தங்கை கிருஷ்ணாவும் இத்தகைய நாட்டுப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

மேல்நாடு சென்று திரும்பிய விஜயலக்‌ஷ்மியும் ரஞ்சித் பண்டிட்டும் நாட்டு நலனையே தங்கள் வாழ்க்கை லட்சியமாக ஏற்று, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து தொண்டாற்றுவதில் உற்சாகம் காட்டினார்கள்.

காங்கிரஸ்காரர்கள் மறியல், ஊர்வலம் முதலியவைகளை வெற்றிகரமாக நடத்தி வந்தார்கள். அரசாங்கத்தினர் தடியடி தர்பாரை வெறித்தனமாக நிலைநாட்ட முயன்றார்கள். -

காங்கிரஸ் தலைவர்களிடையே மிதவாதமும் தீவிர வாதமும் முறைத்து நின்று பின் மோதத் தொடங்கி