பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

53


ரும், தேர்ந்தெடுக்கப்பட்ட, சிலரும் உப்பு காய்ச்சி சட்டத்தை மீறினார்க்ள்.காந்தி கைது செய்யப்பட்டார்.

இந்தியா பூராவும் சத்தியாக்கிரக இயக்கம் உயிர் பெற்றது. பல இடங்களில் தலைவர்கள் சட்டத்தை எதிர்த்து உப்பு காய்ச்சி சிறை சென்றார்கள்

எங்கும் மறியல்-ஊர்வலம்-சொல்மாரி பதிலுக்கு தடியடி-சிறைவாசம்-அபராதம்!.

அலகாபாத்தில் 'உப்பு சத்தியகிரகம்' செய்து ஜவஹர்லால் நேரு தண்டனை பெற்றார். அவ்வளவு தான். நாட்டிலுள்ள நகர்களும் கிராமங்களும் சீற்றம் கொண்டு எழுந்துவிட்டது போல.தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை மீண்டும் பெறப் பாய்ந்தது போல, செயல் புரியத் துணிந்தன. திகைத்துத் திணறய அரசாங்கம் தடியடி-துப்பாக்கிப் பிரயோகம்-ஜெயில் தண்டனை என்று வீசி 'கப்சிப்' தர்பார் கடத்த முனைந்தது. எனினும் மக்களின் உணர்வை ஒடுக்கிவிட இயல வில்லை.

இப் போராட்டங்களின் போது, இந்திய நாட்டின் பெண்மணிகள் காட்டிய தீரம் போற்றுதலுக்குரியது. திகைக்கச் செய்வது. அக்காலத்தில் யாரும் எதிர்பார்த்திராத எழுச்சி அது.

கமலா, கிருஷ்ணா, விஜயலக்ஷ்மி போன்றவர்கள், வீட்டில் மலர்கள் போலவும் மெல்லிய பூங்கொடிகள் போலவும் வாழ்ந்து பழகியவர்கள், சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் வீடு வீடாகச் சென்று,

4