பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

57



நிலை மோசமாய், மோசமாய், மிக மோசமாய் போய்க் கொண்டிருந்தது.

ஜவஹர்லால் நேரு பலமுறை வற்புறுத்தியதன் பேரில் தங்தை ஒய்வு பெற இசைந்தார். கடல் யாத்திரை சென்று மேல் நாடுகளில் சிலகாலம் தங்கலாம் என்று திட்டமிட்டார்கள். தந்தையுடன் கிருஷ்ணாவும் செல்வதாக இருந்தது. அவர்கள் கல்கத்தா நகர் அடைவதற்குள் தேகநிலைமை படுமோசமாகி விட்டதால், பிரயாணம் ரத்து செய்யப்பட்டது.

சில வார காலம் மோதிலால் கல்கத்தா நகரை அடுத்த ஒரு ஊரில் தங்க நேர்ந்தது. அச் சமயத்தில் கமலா நேரு கைது செய்யப்பட்டாள் என்ற செய்தி கிட்டியது. தந்தை நேரு மிகவும் வருத்தமுற்ருர். பலவீனமான நிலையில் உள்ள கமலா கடுஞ்சிறையில் எப்படி வாழமுடியும் என்று வேதனை அடைந்தார் அவர். உடனடியாக அலகாபாத்துக்குக் கிளம்பிவிட்டார்.

அவருடைய நிலைமை கவலைக்கிடமானதும், அரசாங்கம் ஜவஹரையும், ரஞ்சித் பண்டிதரையும் விடுதலை செய்தது. அது நிகழ்ந்தது 1931 ஜனவரி 26-ம் தேதி.

அன்றைய தினம் மற்றும் அநேக பிரபல தலைவர்களும் விடுதலை பெற்றனர். காந்திஜீயும் விடுவிக்கப் பெற்றார். அவர் நேராக மோதிலாலைக் காணவந்தார். அங்கேயே தங்கினார். அவர் அருகிலிருந்தது மோதிலாலுக்கு எவ்வளவோ ஆறுதல் கொடுத்து வந்தது.

மரணப்படுக்கையில் கிடந்த தலைவரைக் காண எவ்வளவோ பேர் வந்து போயினர். ஆயினும் அந்த வீட்டி-