பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

விஜயலஷ்மி பண்டிட்



லே சோகமும் கவலையும் தான் நிலைத்து நின்றன. ஆனல் மோதிலால் சாவைக் கண்டு அஞ்சவில்லை. காந்திஜீயுடனோ, அல்லது ராணி நேருவுடனோ அடிக்கடி தமாஷாகப் பேசிக் களித்தார்.

ஜவஹர், ராணி நேரு, கமலா, விஜயலக்ஷ்மி, கிருஷ்ணா எல்லோரும் சதா அவரைச் சுற்றி அமர்ந்து கவலையோடு கவனித்து வந்தார்கள். சரியான ஊண் உறக்கமின்றி சிச்ரூஷை செய்து வந்தார்கள். இரவிலே முறை வைத்துச் சற்றே கண் அயர்ந்து சிறிது காத்துக் கிடந்தார்கள்

வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களில் எதிர்த்து நின்று வெற்றி கண்ட மோதிலால் மரணத்தோடு நடத்திய சமரில் ஜெயிக்க முடியவில்லை. எக்ஸ்ரே சிகிச்சை செய்யும் நோக்கத்துடன் டாக்டர்கள் அவரை லஷ்மணபுரிக்கு எடுத்துச் சென்றார்கள்.அங்கு பிப்ரவரி ஆறாம் தேதி மரணம் அடைந்தார்.அவர் தேகம் அலகபாத்துக்கு எடுத்துவரப் பெற்று கங்கைக் கரையிலே தகனம் செய்யப்பட்டது.

அன்று நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர். தலைவர்கள் பலரும் தாங்கள் பெருநஷ்டம் அடைந்து விட்டதாகப் பேசித் துயர் அடைந்தனர். ஜவஹரும்,|ஜவாஹரும்,}} விஜயல்ஷ்மியும்,பிறரும் ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு காரணமாக ஆற்ற இயலாத் துயர் எய்தி வாடினர்கள்.

தந்தை, நாட்டின் சுதந்திரம் காணத் தவித்தார். சுதந்திர இந்தியாவில் தான் மரணமடைவேன் என்று சொல்வி வந்தார். மரணம் முந்திக் கொண்டது. அவர் ஆத்மா சாந்தி அடையும் வகையில் நாம் தேசப்பணி