பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

விஜயலக்ஷ்மி பண்டிட்


யத்தை இழந்து விடவில்லை. தலைவரிடமும் லட்சியத்திலும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, எதையும் சகித்துக் கொள்வதற்கு வலிமை தரும் சக்தியாக விளங்கியது.

போராடும் பண்பு பெற்ற வீராங்கனகள் சிறையினுள்ளும் கிளர்ச்சிகள் செய்வரோ; சிறை விதிகளை அனுஷ்டிக்காமல் முரண்டு பிடிப்பார்களோ என்ற அச்சம் சிறைப் பாதுகாவலர்களுக்கு இருக்கத்தான் செய்தது. அவர்கள் விஜயலக்ஷ்மி, கிருஷ்ணா முதலியவர்களிடம் கண்ணியமாகவே நடந்து கொண்டனர். சகோதரிகள் கோரிய பொருள்கள் அவர்களுக்குக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தார்கள்.


சிறை அதிகாரி, அவர்களுக்கு ஏதாவது தேவைப்படுமானால் தெரிவிக்கலாம் என்று சொன்னர் ஒரு சமயம். ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான புத்தகங்கள் அல்லது பொருள்களைக் குறிப்பிட்டார்கள். கிருஷ்ணா கிடைத்த காலத்தைப் பொன்னக்கும் ஆசையோடு அயல் மொழிகளைக் கற்க விரும்பினாள். ஆகவே, பிரஞ்சு, இத்தாலிய பாஷைப் புத்தங்கள், ஷார்ட் ஹேண்டு புத்தங்கள் சில, மூன்று டிக்ஷ்னரி முதலியன வேண்டும்; இவை தவிர பொழுது போக்கிற்குத் துணை புரியும் நாவல்களும் தேவை என்று சொன்னாள்.

அவள் வேடிக்கையாகச் சொல்லவில்லை தனக்கு அவசியம் என்று பட்டதை எடுத்துச் சொன்னாள். அவ்வேளையில், தான் ஒரு அரசியல் கைதி: டிக்ஷ்னரிகளையும் சேர்த்து ஆறே ஆறு புத்தகங்கள் தான் அனுமதிக்கப்படும் என்கிற பிரக்ஞை அவளுக்கு இல்லவே இல்லை,