பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

65


அதிகாரி யோசனையில் ஆழ்ந்துவிட்டார். பிறகு சொன்னர் : 'உங்களுக்காக சிறு லைபிரரி ஒன்றை சிறைக்குள் ஏற்பாடு செய்து விட்டால் மிகச் செளகரியமாக இருக்கும்: இல்லையா? உங்களுக்குத் தேவையான புத்தங்களை நீங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அதற்காக மேலிடத்தில் அனுமதி பெற்று ஆவன செய்யட்டுமா?'

அவர் விளையாட்டாகப் பேசவில்லை. கர்ம சிரத்தையாகத் தான் கேட்டார். ஆனால், கிருஷ்ணா பதில் சொல்லத் தயங்கினாள். அதிகாரியின் முகத்தையே கவனித்து நின்றாள். அவர் கண்களில் புன்னகைப் பொலிவு பூத்து நிற்பதை உணர்ந்து உற்சாகத்தோடு பதில் அளித்தாள்.


'உங்களுக்கு மிகுந்த தொந்தரவாகத் தோன்றவில்லை என்றால் அப்படியே செய்யுங்கள். அது மிக இனிய ஏற்பாடாக இருக்கும். பாருங்கள். இங்கே நூல் நூற்று வீண் பொழுது போக்குவதை நான் விரும்ப வில்லை. ஆகையினால் எனக்குச் சீக்கிரமே புத்தகங்கள் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் நல்லது 'என்றாள் அவள்.


அந்த அதிகாரி எவ்வளவோ முயற்சி செய்து, கிருஷ்ணாவுக்குத் தேவையான புத்தகங்களை வரவழைத்துக் கொடுத்தார். அவை வருவதற்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

ஜெயிலில் வாழ நேர்ந்த பெண்களுக்கு ஆளுக்கு ஆறு சேலைகளும் வேறு சில உடுப்புகளும் தான் அனுமதிக்கப்பட்டிருந்தன. தினந்தோறும் துணிகளை அவ-