பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

விஜயலக்ஷ்மி பண்டிட்


 சிறு பிராயம் முதலே சாதுர்யம் நிறைந்து விளங்கியவள் தான் சொரூபா. மந்திரியாவதற்கு அவள் எவ்விதத்திலும் தகுதி உடையவளே. எந்த விஷயத்திலும் அவள் பதறுவதே கிடையாது. எத்தகைய சந்தர்ப்பமாயினும் சரியே; பதட்டம் அடையாமல் அமைதியாகக் கவனித்துச் செயல்புரியும் குணம் அவளிடம் உண்டு. அவளது வசீகரப் பண்பும், தன்னடக்கமும், அழகும் மக்களை வசியம் செய்து அவளுக்கு வெற்றி பெற்றுத் தரும் துணைகளாயின. மந்திரி பதவியில் அவள் நன்கு சோபித்தாள். அவள் ஏற்றுக்கொண்டது கடினமான பொறுப்பு. அத்தகை பொறுப்புக்கு பயிற்சியோ, பழக்கமோ அவளுக்குக் கிடையாது. ஆயினும், நாட்டு மக்கள் போற்றும் முறையில் வெற்றிச் சிறப்புடன் திகழ்ந்தாள் அவள்'

"சொரூபா அரசியலில் தீவிரமாகச் செயல்புரிய முன் வந்த போது அவளுடைய பேச்சுத் திறமை எல்லோருக்கும் ஆச்ச்ரியமே தந்தது. பிரசங்கியாக மிளிர்வதற்கே பிறந்தவள்ப போல்,நடுக்கமின்றி-கூச்சமின்றி, பெரியபெரிய கூட்டத்தின் முன்னிலையிலும் பேச முடிந்தது அவளால்.ன்தெளிந்த ஒட்டத்துடனும், சொல்லாட்சியுடன் ஹிந்துஸ்தானி, ஆங்கிலம் இரண்டையும் பேச வல்லவள் அவள்.

"இளம் பருவத்திலேயே சொரூபாவின் கூந்தலில் நரை நெளியத் தொடங்கியது. தலைமுறை தலைமுறையாக வளர்ந்துள்ள குலப்பண்பு இது. விரைவிலேயே அவள் கூந்தல் வெள்ளி முலாம் ஏற்றுவிட்டது. ஆனால் அது அவளது இனிய தோற்றத்துக்கு எடுப்பாகத்தான்