பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

விஜயலக்ஷ்மி பண்டிட்


யும் சுறுசுறுப்பையும் ஒயாது உழைக்கும் பண்பையும் கண்டு போற்றாதார் எவருமில்லை.

பொதுமக்களின் சுகாதார அபிவிருத்திக்காகவும், கிராமங்களின் முன்னேற்றத்துக்காகவும் அவள் எவ்வளவோ சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாள். குடி தண்ணீர் வசதி இல்லாது கஷ்டப்பட்ட கிராமங்களுக்கு அவ்வசதி கிட்ட வழி செய்தாள். பிரசவ காலத்தில் போதிய மருத்துவ உதவி கிடைக்காது அவதியுற்றவர்களின் துயர் நீக்கும் நோக்குடன் புதிய திட்டங்கள் செய்தாள்.

கிராமங்களில் மொத்தம் 300 வைத்தியசாலைகளாவது வேண்டும். அவற்றில் 200 ஆயுர்வேத, யுனானி வைத்திய சாலைகளாக இருக்க வேண்டியது அவசியம் என்று திட்டமிட்டாள் ஸ்தல ஸ்தாபன மந்திரியான விஜயலக்ஷ்மி.

அவள் ஆட்சிக்காலத்தில் 200 விளையாட்டு மைதானங்கள் ஏற்பட்டன. ஊர்தோறும் சென்று 16 வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டன. 24 இடங்களில் பிரசவ ஆஸ்பத்திரியும், குழந்தைகளுக்கு வைத்தியம் செய்ய 192 புதிய வைத்தியசாலைகளும் உண்டாயின. குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்கும் திட்டமும், முதியோர் கல்விக்காக இரவுப் பள்ளிக்கூட வசதிகளும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டன.

இவ்விதம் ஆர்வத்துடனும் சேவா உணர்ச்சியோடும் செயல்புரிந்து வந்தாள் விஜயலக்ஷ்மி. ஆசை நிறைந்த திட்டங்கள் பல வகுத்திருந்தாள் அவள்.