பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

79


 அளிக்கவே இல்லை. காந்திஜீயைக் கண்டு பேசி விட்டுத் திரும்புகிற பாதையில் நடு வழியில் நேருஜீயை கைது செய்தனர். அவருக்கு நான்கு வருஷக் கடுங்காவல் தண்டனை விதித்தது சர்க்கார்.

அரசாங்கத்தின் கன்னெஞ்சக் கொடுஞ் செயல் நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது. நாட்டு மக்களின் ஆவேசத்தைத் தூண்டி விட்டது. சத்தியாக்கிரகத்தில் பங்கு பெறப் பலரும் துடித்தார்கள்.

இந்த சத்தியாக்கிரகத்தின் போது, காந்திஜீயின் அனுமதி பெற்று,கிருஷ்ணாவின் கணவர் ராஜாவும் சிறை புகுந்தார். கிருஷ்ணா, காந்தியின் அனுமதி கோரிய போது, மகாத்மா மறுத்து விட்டார். சின்னஞ் சிறு குழந்தைகள் இருக்கின்றன; அவற்றைக் கவனிக்க வேண்டிய கடமை அவளுக்கு உண்டு என்று அறிவித்துவிட்டார் மகாத்மா. அவரது வாக்கை கிருஷ்ணா எப்படித் தட்டிக் கழிக்க இயலும்?

விஜயலக்ஷ்மி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டாள். 1940 டிசம்பர் 9-ம் தேதி அவள் சத்தியாக்கிரகம் செய்தாள். சர்க்கார் உடனே அவளைக் கைது செய்து, நான்கு மாதம் சிறைவாசம் என்று தண்டனை விதித்தது.

இரண்டாவது முறையாகச் சிறைத் தண்டனை பெற்ற விஜயலக்ஷ்மி நான்கு மாதங்களையும் ஐக்கிய மாகாணத்தில் உள்ள் நைனி நகர ஜெயிலில் கழிக்க நேர்ந்தது.

உலக நாடுகள் யுத்தக் கொடுமைகளை அனுபவித்து அவதியுற்றன. பிரிட்டனின் நெருக்கடியான நிலைமை-