பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

81


அத்தியாயம்-13.

முப்பதாண்டுகளுக்கு அதிகமாகவே சுதந்திரத்து காகப் போராடி வந்த காங்கிரஸ், ஆங்கிலேயரின் போ கை கன்கு புரிந்து கொண்ட பிறகும் சும்மா இருக்க விரும்பவில்லே. நாட்டினரின் உள்ளத்துடிப்பை உணர்ந்த காந்திஜி தீவிரச் செயலுக்கு வழிகாட்ட ஒன்றினால்.

1942-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி பம்பாய் நகரில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது. அசிரத்தை காட்டும் அரசாங் கத்துடன் போராடியே தீர வேண்டும். செயலாற்ற வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும்' என்று நாட்டுக்கு ஆணையிட்டார் மகாத்மா.

அன்று இரவு காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்த பிறகு தலைவர்கள் ஒய்வுபெற வீடுகள் சேர்ந்தனர். அவர்கள் வெகு நேரம் தூங்கியிருக்க மாட்டார்கள். அரசாங்கத்தின் சட்டக் கைகள் அவர்களைத் தட்டி எழுப்பின. பின்னிரவு மூன்று மணிக்கு போலீஸார் காந்திஜியையும் இதர தலைவர்களையும் கைதுசெய்து எங்கே கொண்டு போய்விட்டார்கள்.

இப்படிச் செய்தால் மக்கள் பயந்து ஒடுங்கிப் போவார்கள்ந நாட்டில் அமைதி நிலவும் என்று ஆளும் இனத்தினர் நம்பினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பாராத விபரீத விளைவுகளே நாடெங்கும் தலைதூக்கி விட்டன.