பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

விஜயலக்ஷ்மி பண்டிட்


தலைவர்கள் என்ன ஆணார்கள் அவர்களைப் போலீசார் எங்கே கொண்டு போனர்கள் ? இவ்விஷயம் எது வும் யாருக்கும் விளங்கவில்லை. திவாங்தரங்களுக்கு அனுப்பிவிட்டனர்.நாடு கடத்திக் கப்பலேற்றி விட்டனர் என்ற வதந்தி பரவியது எங்கும். இரவோடு இரவாக இவ்வளவு மர்மமாக தலைவர்களைக் கைது செய்தது அக்கிரமம் என்ற உணர்ச்சி காரணமாக நாட்டில் கோபமும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.

வெள்ளையனே, வெளியேறு என்று மகாத்மா காந்தி அருளிய மணிவாசகத்தைச் செயல் முறைக்குக் கொண்டுவந்து அவர்களை வெளியேற்ற ஆவனசெய்வோம் என்று நாட்டினர் துணிந்தனர்.அஹிம்ஸையை அந்தரத்திலேவிட்டனர்.அழிவுவேலைகளைச் செய்து களித்தனர்,

ரயில்களைக் கவிழ்த்தார்கள் ; ரயில் பாலங்களை உடைத்தார்கள் கட்டிடங்கள் பலவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினர்கள். போலீசாரைத் தாக்கி, ஆயுதங்களப் பறித்தார்கள். கொள்ளை, கொலை, தீ-நாடு முழுவதும் கோபக் கொந்தளிப்பு. ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் கொதித்து எழுந்தால் காடு எப்படி மாறும் என்பதற்குப் பிரமாணமாக விளங்கியது இந்தியா,

ஆட்சியினர் வேடிக்கை பார்த்து நிர்பார்களா ? வெறி வேகத்தில் செயல் புரிந்தார்கள். அடக்குமுறைகளை அளவில்லாமல் கையாண்டார்கள். கிராமங்களையே சுட்டெரித்தார்கள். ஜனக் கூட்டங்கள் மீது பீரங்கிப் பிரயோகம் செய்தனர். விமானங்களிலிருந்து வெடிகுண்டுகள் வீசினர். மக்களைச் சித்திரவதை செய்தார்கள்.