பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

விஜயலக்ஷ்மி பண்டிட்

ரீதாவை முத்தமிடக் குனிந்தாள் விஜயலக்ஷ்மி. ’நாங்கள் வெளியே வந்து வழி அனுப்புவோம். இதை எல்லாம் நாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோம் என்பதைப் போலீஸ்காரர்களும் தெரிந்து கொள்ளட்டுமே!’ என்றாள் இரண்டாவது மகள் தாரா.

மூத்த பெண் லேகா சொன்னாள் ’கவலைப்படாதே அம்மா. இவர்களை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று.

’அருமை அம்மா, போய்வா, நமது கொடி தாழ்வுறாதபடி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று தாரா சொன்னாள்.

இளையவள் ரீதா தாயைத் தழுவிக் கொண்டு, உறுதியான குரலில் சொன்னாள்:’அம்மா, உன் உடம்பைப் கவனித்துக் கொள். நீ உள்ளே அடைபட்டுக் கிடக்கிறபோது, நாங்கள் வெளியே பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடுவோம்’.

’ஈன்ற பொழிதினும் பெரிது’ உவந்தாள் தன் புதல்வியின் வீரவாசகம் கேட்டதாய்.

அங்கு சில தினங்கள் தங்கிச் செல்ல வந்திருந்த இந்திராவும், புதல்வியரும், பணியாளரும் வழியனுப்ப விஜயலக்ஷ்மி மகிழ்ச்சியுடன் சிறைசென்றாள். இம்முறையும் அவள் நைனி ஜெயிலில் தான் இடம் பெற்றாள். முன்பு பழக்கமான அறையே இப்பொழுதும் கிடைத்தது.

சிறைவாசம் தொல்லைகள் மலிந்ததாகத்தான் இருந்தது. கோடைவெயிலின் உஷ்ணம் வேறு கஷ்டப்-