பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

விஜயலக்ஷ்மி பண்டிட்

இந்திராவும் பெரோஸ் காந்தியும் கைது செய்யப் பெற்று நைனி ஜெயிலில் நேரு குடும்ப முகாமாக மாறி விட்டது!

அத்தியாயம்-14

பிரிட்டிஷாருக்கு அமெரிக்காவின் பக்கபலமும் டாலர் உதவியும் தேவைப்பட்டது. அமெரிக்கர் பலர் இந்தியாவுக்கு அனுதாபம் காட்டி வந்தனர். இந்தியா விஷயத்தில் பிரிட்டன் நடந்து கொள்வது சரியல்ல என்ற கருத்து அமெரிக்காவில் பரவி வந்தது.

காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவின் உண்மை நிலைமை பற்றியும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பண்புகள் குறித்தும் உலகின் பல பகுதிகளிலும் பிரசாரம் செய்து வரத்தவறியதில்லை. இதன்மூலம் உலகநாடுகளின் அனுதாபத்தையும் ஆதரவையும் இந்தியா பெற முடிந்தது. அமெரிக்காவிலும் நம் நாட்டுத் தலைவர்களின் பிரசாரம் வேலை செய்திருந்தது.

’ஹிட்லர், முசோலினி ஆகியோரின் சர்வாதிகாரத்தைக் கண்டித்து, ஐரோப்பிய நாடுகளுக்காகப் பரிந்து பேசுகிற பிரிட்டன் இந்தியாவை அடிமை நாடாக வைத்திருப்பது ஏன்?’ என்ற குரல் அமெரிக்காவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. தனது கெளரவத்தைப் பாதுகாப்பதற்காக இங்கிலாந்து அந்நாட்டில் பிரசாரம் செய்ய வேண்டியது அவசியமாயிற்று.

அவ்வகையில் இந்தியசர்க்காரும், பிரிட்டிஷ் அரசாங்கமும் கோடிக்கணக்கிலே பணத்தைச் செலவு செய்தது. இந்திய சர்க்காரின் ஆதரவு பெற்ற கைக்-