பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

87

கூலிகள் பலர், ஆங்கிலேயருக்கு சாதகமாக பொய் பிரசாரம் செய்து வந்தார்கள் அங்கே. ஆங்கிலேயர் ஆளுகையினால் இந்தியா பெற்று வருகிற இன்பங்கள், லாபங்கள் பற்றிக் கணக்கில்லாது கதைத்தார்கள்.

அமெரிக்காவில் தங்கி உண்மையை உலகுக்கு உணர்த்த முயன்ற ஒரு சிலரின் பேச்சு, கட்டுப்பாடான பொய்ப் பிரசாரத்தின் முன்னுல் எடுபடமுடியாது போயிற்று.

இச் சந்தர்ப்பத்தில்தான் உலக சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் மகாசபை ஒன்று கூடியது. அதில் கலந்துள்ள இந்திய சர்க்காரின் சார்பிலே ஸர். ராமசாமி முதலியார், ஸர். பிரோஸ் தான் நூன், ஸர் வி. டி. கிருஷ்ணமாச்சாரியார் ஆகிய மூவரும் சென்றனர் அவர்களது திறமையும் வாக்குவன்மையும் இந்திய சர்க்காரின் புளுகுப் பிரசாரத்துக்குத் துணை புரிந்தன.

ஐக்கிய நாடுகளின் சபைக்கும, அமெரிக்காவுக்கும் இந்தியா பற்றிய உண்மைகளை ஆணித்தரமாக எடுத்துச்சொல்ல வேண்டியது அவசர அவசியம் என்ற நிலைமை ஏற்பட்டது. சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்திருந்த விஜயலக்ஷ்மி அந்தப் பணியைச் செய்யத் துடித்தாள். அதற்கு அரசாங்கம் அனுமதிச் சீட்டு மறுக்கும் என்பது அவள் அறிந்தது தான்.

ஆகையினால், அமெரிக்கக் கலாசாலை ஒன்றில் கல்வி பெற்று வாழும் தன் புதல்வியர் இருவரையும் காணும் ஆசையினால் அமெரிக்கா செல்வதாகச் சொல்லி, அனுமதிச் சீட்டு கோரினள் அவள். சில்லறைத் தடை-