பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

விஜயலக்ஷ்மி பண்டிட்

கள் எழுப்பி, பிறகு சீட்டு வழங்கியது அரசாங்கம். 1944 நவம்பரில் விஜயலக்ஷ்மி அமெரிக்காவுக்குக் கப்பலேறினாள்.

அமெரிக்கா சேர்ந்ததும், அங்கு வசித்த தேசபக்த இந்தியர்களின் துணைய்யோடு, தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டாள் அவள். இந்திய அநசாங்கத்தின் கையாட்கள் இந்தியாவின் பிரதிநிதிகள் அல்லர் : அவர்கள் வாக்கு இந்திய மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கவுமில்லை என்று வீரமுழக்கம் செய்தாள் அவள்.

”நான் இந்திய காங்கிரஸ் மகாசபையைச் சேர்ந்தவள். அமெரிக்காவில் உள்ள இந்தியன் லீக் என்னே ஒரு பிரதிநிதியாக ஏற்று, இந்தியாவின் உண்மை நிலைமையை எடுத்துச் சொல்லும் பொறுப்பை எனக்கு அளித்துள்ளது. இந்தியா இன்று இங்கிலாந்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இந்தியாவுக்குச் சுய அரசு இல்லை: சுயமான பிரதிநிதித்துவமும் இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தேர்ந்தெடுத்த நபர்களே உங்கள் சபையில் அங்கம் பெற்றிருக்கிறார்கள். இது மோசமான நிலைமை மட்டுமல்ல ; நியாய விரோதமும் கூட. ராஜ்ய தர்மத்துக்கு ஒத்து வராத செயலுமாகும். ஆகவே, சர்வ சுதந்திரம் பெற்ற சகல நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட சபை என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. உலக ஜனத்தொகையில் ஐந்திலொரு பங்கு கொண்ட இந்தியா பரிபூரண சுதந்திரம் பெற நீங்கள் பிரகடனம் செய்ய வேண்டும். ஏகாதிபத்திய ஆசையும் சுரண்டலும் மமதையும் ஒழிந்தாலன்றி உலகில் சமாதானம் நிலைக்காது. உங்கள் சபையும் தன் கடமையைச் செய்ததாகக் கொள்ள முடியாது.