பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

91

 சபையில், தலைமை பீடத்தில் அமர்ந்து மென்மையும் உறுதியும் கலந்த வகையில் ஆட்சி புரியும் விஜயலக்ஷ்மியின் சாமர்த்தியத்தைக் கண்டு புகழாதவர்கள் இல்லை எனலாம்.

உலகில் வேறு எந்தப் பெண்மணிக்கும் கிட்டாத பெரும் பாக்கியம் தனக்கு வாய்த்திருப்பது, ‘உலகம் இந்தியாவுக்கு அளித்துள்ள கொளரவமே ஆகும்’ என்றுதான் அவள் கருதுகிறாள்.

’உலகிலே அச்சமும் அமைதியின்மையும் நீடிக்கின்றன. உலகத்தைக் கவிந்துள்ள பயம் நீங்குவதற்கு சமாதானம் பற்றிய உறுதி தேவை. எல்லா நாடுகளின் சுதந்திர உரிமையும் கெளரவிக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று, ஐ.நா.சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் கூறினாள்.

இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும் அமைதிக்காகவும் தீவிரமாக உழைத்து வந்த தனக்கு உலக சமாதானத்துக்குப் பாடுபடும் வாய்ப்பு கிட்டியதே என்று எண்ணி மகிழ்ந்தாள் அவள். அவளுக்கு லட்சியத்தில் உறுதியான நம்பிக்கை உண்டு.

ஆயினும், உலகத்தின் ஏகாதிபத்திய நாடுகளின் ஆசைகளையும் செயல்களையும் கவனிக்கும் போது, சிந்தனையாளர்களின் உள்ளத்திலே இயல்பாக எழக் கூடிய சந்த்ந்ந்கம் அவளுக்கும் உண்டாகாமல் இல்லை.

ஐக்கிய நாடுகளின் சபை எந்த லட்சியத்தை அடையவேண்டும் என்று பாடுபடுகிறதோ, அத்தகைய