பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

விஜயலக்ஷ்மி பண்டிட்

 சுதந்திரமும் பரஸ்பர நம்பிக்கையும் நீடிக்கும் உன்னத நிலைமை, ஏற்பட்டு விடும் என்று நம்புவது கூடச் சரியில்லையோ என்ற கவலை எனக்குச் சிலசமயம் எழத்தான் செய்கிறது. அந்த லட்சியம் எளிதில் சித்தியாகி விடக் கூடிய அற்புத ஜாலம் இல்லையே என்ற எண்ணமும் என் நினைவில் எழும். நாம் அந்த மகோன்னத நிலையை எட்டிப் பிடித்துவிடவில்லை என்பது உண்மைதான். எனினும், அதை நோக்கி நாம் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி நமக்கு உண்டு. இது விஜயலக்ஷ்மியின் கூற்று.

ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி பண்டிட் 1954-ம் வருஷம் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தாள். இப்பொழுதுதான் இலங்கைக்கு நான் முதல்முறையாகச் செல்கிறேன்’ என்று அவள் சொன்னாள். மேல்நாடுகளிலும், அமெரிக்காவிலும் சுற்றுப் பிரயாணம் செய்து ஜனங்களோடு தொடர்பு கொண்ட அளவுக்கு, தான் தென்னிந்தியாவில் யாத்திரை செய்யவில்லை என்பது அவளது அபிப்பிராயம். ஐக்கியநாடுகளின் சபைத் தலைமைப் பொறுப்பு தீர்ந்த பின்னர், இந்தியாவின் பல பகுதிகளிலும் சுற்றி மக்களின் நிலைமையை நன்கு உணரும் ஆசை தனக்கு இருக்கிறது என்று அவள் தெரிவித்தாள்.

தாய் நாட்டின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் அமைதிக்காகவும் தீவிரமாக உழைத்துப் புகழ்பெற்ற விஜயலக்ஷ்மிக்கு இப்போது 58 வயதாகிறது. எனினும் இளமைத் தோற்றமும், பெண்மைப் பொலிவும், இனிமைக் கவர்ச்சியும் அவளிடம் நிறைந்து காணப்-