பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

93


படுகின்றன. மாறாத இளமை குடிகொண்டிருக்கிறது அவள் உள்ளத்திலே.

கவிக்குயில் சரோஜினி தேவியை உலகுக்கு அளித்த இந்தியா, கீர்த்திபெற்ற எத்தனையோ மாதர் திலகங்களை உலகத்திற்கு அறிமுகம் செய்த பாரதநாடு, அரசியல் மேதை அழகி விஜயலக்ஷ்மியையும் தந்துள்ளது. அதன் மூலம் அவளுக்குப் பெருமை அளித்துத் தானும் மாண்புற்றுத் திகழ்கிறது.

வாழ்க விஜயலக்ஷ்மி! உயர்க அவள் திறமை! அவள் லட்சியம் சிறப்புற்று வெற்றியுடன் விளங்கக் காலம் துணைபுரியும் என நம்புவோம்.


ராயன் அச்சகம், சென்னை-1.

ராயன் அச்சகம், சென்னை-1.