பக்கம்:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தத் தைரியம்

35

யும் என்று தைரியம் கொண்டிருக்கிறார்? தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியத்தைக் கொண்டிருக்கிறார்! எப்படி?

எப்படி எனில், அவர் ஓர் மாயாவி ! ஜால வேடிக்கைக்காரர் ! "வேடிக்கை பேசாதே" என்று கூறுவீர்; வேடிக்கையல்ல நாம் கூறுவது; தாசரான தமிழரைக் கொண்டு, வெறும் கிளர்ச்சிக்காரக் கிழவரொருவர், தேசத்தை ஆளலாம் என்று தைரியம் கொண்டுள்ளார் என்றால், மாயவித்தை தெரிந்தவராக இருந்தாலன்றி வேறு எப்படி முடியும் அவர்மட்டுமா, அன்பர்களே ! சிற்பி, ஓவியக்காரன், தொழிலாளி, இசைவாணன், இவர்களெல்லாம் மாயாவிகளே! அந்த மாயாவி இனந்தான் பெரியார்!

நாலைந்து சிறு வட்டில்கள், அவைகளிலே பலவர்ணக்குழம்புகள், கையிலே ஒரு சிறு, பூச்சிடும் கோல், எதிரே ஒரு திரை, இவ்வளவுதான்! இவைகளைக்கொண்டு கடலை, கன்னியரை, கனி குலுங்கும் சோலையை, காவலர் அஞ்சும் களத்தை, புன்னகையை மெல்லிடையை, கண்ணீரை விண்ணழகை, காலைக் கதிரோனை மாலைமதியை, இன்னோரன்ன பிறவற்றைச் சிருஷ்டிக்க முடியுமா? அதோ ஓவியக்காரனாகிய மாயாவியைப் பாருங்கள். இப்படி அப்படித் தீட்டுகிறான், ஏற இறங்கக் கவனிக்கிறான். இரவும்பகலும், களமும் வளமும், கனியும் பனியும், அவன் இடும் ஏவலுக்காகக் காத்துக்கிடக்கின்றன ! ஓவியக்காரன், ஒரு மாயாவி! மண்ணிலே பொன் காண்பீரோ? மாயாவியான தொழிலாளி காண்-