பக்கம்:வீர காவியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

14

இயல் 2

முழு வலியன் மாவேழன் என்னும் வீரன்
மூவகத்தின் படைத்தலைமை பூண்டு நின்றான்.

அக்காலை மூவகத்தின் படைந டாத்தும்
   ஆணழகன் பலகளிற்றின் வலிமை மிக்கான்;
எக்காலும் போர்க்களமே இருப்பாக் கொண்டான்
   ஏறனையான் மாவேழன் எனும்பேர் பூண்டான்;
மிக்காரும் ஒப்பாரும் காணாச் செம்மல்
   மேவலரை நடுக்குறுத்தும் இமையா நோக்கன்;
புக்காரும் வெலற்கரியன்; அவன்பேர் கேட்டால்
   பூவேந்தர் நடுநடுங்கிப் பதுங்கி நிற்பர்.7

மூவகமே அவன் வணங்கும் அன்னை யாகும்;
   முதல்மகனாம் மன்னவனே தந்தை யாவன்;
சேவகரே மனம்விழைந்த சுற்ற மாலர்;
   சிரிப்பொளிரும் இடைமருவும் செவ்வாய் வாளின்
நாவகமே காதலியின் இதழ்க ளாகும்;
   நள்ளார்தம் கூர்வாளால் முகத்தும் மார்பும்
பாவியமேல் விழுப்புண்ணே முத்த மாகும்;
   பகைவருடல் நிறைகளமே மெத்தை யாகும்.8

.........................
மேவலர் - பகைவர். புக்கு ஆரும் - யாரும் புகந்து. ஒளிரும் - விளங்குகின்ற நா. அகம் - விளிம்பு. நள்ளார் - பகைவர். பாவிய- படர்ந்துள்ள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/17&oldid=1354168" இலிருந்து மீள்விக்கப்பட்டது