பக்கம்:வீர காவியம்.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரகாவியம்

240

'திரைசூழ்ந்த இவ்வுலகில் நிகரே யில்லாத்
தீரனைத்தான் கணவனெனப் பெற்றி ருந்தேன்;
அரிநேர்ந்த மகனைத்தான் பெற்றி ருந்தேன்;
ஆயினுமப் பேறனைத்தும் நிலைக்க வில்லை;
புரைதீர்ந்த நன்மைதரும் எனநி னைந்தே
பொய்ம்மொழிந்தேன் அம்மொழியால் என்றன் வாழ்வு
கறைசேர்ந்து போனதம்மா! இன்பம் என்னும்
கரைதுார்ந்து வீழ்ந்ததம்மா!' என்று நோவாள். 475

கொழுநனுக்கே அழுவாளோ? சுமந்து பெற்ற
கொழுந்தினுக்கே அழுவாளோ? தனக்கு நேர்ந்த
பழுதினுக்கே அழுவாளோ? மகன்பாற் கொண்ட
பரிவினுக்கே அழுவாளோ? தந்தை கொன்ற
இழிவினுக்கே அழுவாளோ? அந்தோ! அந்தோ!
இரவினுக்கும் பகலினுக்கும் அழுதே தீர்ந்தாள்;
அழிவினுக்கே ஆளாகார் யாரே உள்ளார்?
அழுதழுது கரைந்துருகித் தீர்ந்தே போனாள்! 476

போர்ப் படலம் முற்றும்,

பிழை- திருத்தம்

பாடல்எண் வரி பிழை திருத்தம்
72 3 பேருடையான் பேறுடையான்
136 7 அடடி அட்டி
172 4 கண்டேண் கண்டேன்
227 2 இண...கொடிபோல் இணர்க்கொடிபோல்
315 1 இகழ்துரைத்த இகழ்ந்துரைத்த
321 2 மெய்ம்மிபுகு மொய்ம்புமிகு
334 6 எடுந்து எடுத்து
பக்கம் 147 சேயேன் சேயோன்
அடிக்குறிப்பு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/243&oldid=911466" இலிருந்து மீள்விக்கப்பட்டது