பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 வெளிச்சத்தை நோக்கி...

குரலில் சொன்னவளாயிற்றே.... அது பொய்யாகுமா... அன்றொரு நாள்...

மெய்யப்பன் விமலாவைப் பார்த்தான். எதிரே உட்கார்ந்திருக்கும் ரவியுடன், சிரிப்பு பூக்க, கண்கள் மின்னப் பேசிக் கொண்டிருந்தாள். மெய்யப்பன் அவள் மேஜைக்குக் கீழே தற்செயலாகப் பார்த்தான். லாவகமாகப் போட்டிருக்கும் அவள் கையை, ரவியின் கை வருடிக் கொண்டிருக்கிறது. பெருவிரலைப் பிடித்து அழுத்துகின்றது. பிறகு முழங்கை வரைக்கும் படர்ந்து, எந்தக் கை யாருடைய கை என்பது தெரியாமல் போகிறது.

மெய்யப்பன், நோக்கிய திசையையே வெறுப்பவன் போல், வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். அடியே... நீ காதலி... நல்லா காதலி.... ஆனால், மூணு வருஷம் உயிரைக் கூட கொடுக்கத் தயாராய் இருந்தவனை - இப்படி பரிகசிக்கப்பட்டு, பரிதாபமான நிலையில் இருக்கும்போது, ஒரு சின்ன இரக்கம்கூட இல்லாமல், உயிரைக் கொடுக்க முன்வந்தவன் துடிக்கும்போது, நீ, அவன்கிட்ட ஒன் கையைக் கொடுக்கிறேன்னா.... பரவாயில்லம்மா... இழவு வீட்டுக்கும் ஆடை அலங்காரத்தோடு போகிறவரை என்ன செய்ய முடியும்.... அப்படி போறது தப்புன்னு சொல்லத்தான் முடியுமா..?

மெய்யப்பன் துடித்துப் போனான். தனக்கு ஆதரவு காட்ட ஒரு ஜீவன்கூட இல்லையே என்று தவித்தான். அத்தனைபேரும் செத்து, அவனைப் பேய்களாய் பயமுறுத்துவதுபோல் பயந்தான். கண்களைக் கைகளால் மூடிக்கொண்டான். ஆரம்பத்தில் அனுதாபம் காட்டிய சகாக்கள், அசிரத்தைப் பட்டவர்களாகி, பிறகு சிரிப்பவர் களாகி - தானும் சிரிப்புப் பொருளானதன் பொருள் புரியாமல் தவித்தான்.

மெய்யப்பன், சோர்விழந்து கிடந்தான். ரவியின் கையும், விமலாவின் கையும் பிரிந்த பாடில்லை. பியூன் முனுசாமி