பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 107


போயிருந்த அவன், இப்போது, நெருப்பில் உருகி, நீரில் பட்டு இறுகிய இரும்புபோல் மாறினான். அந்த இரும்பு யந்திரம்... ரயில் எஞ்சின் மாதிரி உறுமிக்கொண்டே ஓடியது - வெளியே வெளிப்பட்ட பிரமைகளோடு, வெளியே சொல்ல முடியாத பயங்கரமான உணர்வுகளோடு,

(14)

வாரங்கள், மாதங்களாயின. மெய்யப்பன், கோவில் களுக்குப் போய்ப் பார்த்தான். ஈஸ்வரன் கோவிலுக்குப் போய், நடராஜரைப் பார்க்கும்போது, அவரது ஒற்றைக் காலுக்குக் கீழே கிடக்கும் முயலவனாக தன்னைப் பாவித்துக் கொண்டான். முருகன் கோவிலுக்குப் போனால், வேலே அவனைக் குத்திக் குதறுவது போன்ற பயம்.

இதற்கிடையில், டீக்கடை நாயர், ஒரு நபரைக் கூட்டிக் கொண்டு வந்து, தாயத்துப் போட வைத்தார். கையில் இருந்த மோதிரத்தை அடகு வைத்தும், சேமித்த பணத்தைப் போட்டும், தாயத்துப் போட்டுக் கொண்டான். அதைப் போட்ட ஒன்பது நாட்களில் உலகேம அவன் காலடியில் விழும் என்று ‘மந்திரவாதி' சொன்னார். ஒன்பது நாட்களுக்குப் பிறகும், அவனது அரக்க உணர்வுகள் வலுத்தனவே தவிர, விலகவில்லை. மந்திரவாதியிடம் மீண்டும் போனால், அந்த ஆசாமி, எவளோ ஒருத்தியை இழுத்துக் கொண்டு போய், அதனால் ஏற்பட்ட சிக்கலில், இப்போது லாக்கப்பில் இருப்பதை அறிந்ததும், தாயத்தைக் கழற்றி வீசியெறிந்தான். ஆனால், கும்பம் ஏற்ற குடமேற்ற, தகடெழுத, தாயத்து செய்ய என்பவை போன்ற