பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிச்சத்தை நோக்கி...

1


அந்த அலுவலகம் இயங்குகிறதோ இல்லையோ, ஊழியர்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள். காலையில் களைப் போடு வந்து , மாலையில் சுறுசுறுப் போடு போகிறவர்கள். மாலை மணி ஐந்தரை வருவதற்கு, இன்னும் அரைமணி நேரமே பாக்கி, வீட்டிற்குப் போவதற்கு இப்போதே ஆயத்தம் செய்ய வேண்டாமா? பாக்கி நேரத்தில், பாக்கி வேலையை செய்யனுமா என்ன..? நாளை என்பது எதற்காக இருக்கு? வீடு என்பது எதற்காக இருக்கு? அங்கே மட்டும் செய்ய வேண்டிய வேலை பாக்கி இல்லையா?

சுவர்க்கடிகாரம் ஐந்து தடவை அடித்துக் கொண்ட போது, அடிக்கப்பட்ட டைப் ரைட்டர்கள், பாதிக் காகிதங்களைக் கெளவியபடி நின்றன. மானேஜரின் அறைக்கு முன்னால், துவார பாலகி மாதிரி, 'எஸ்' நாற்காலியில் உட்கார்ந்திருந்த வாணி, ஓசைப்படாமல் எழுந்திருக்கப் போனாள். செருப்புச் சத்தத்தை மோப்பம் பிடித்து, மானேஜர் தன்னைக் கூப்பிட்டு விடக்கூடாது என்று பயந்தவள்போல், அந்த ஸ்டெனோகிராபர் பெண், மேஜைக்கு அடியில் கிடந்த