பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 109


வார்த்தெடுத்த தோற்றமும் கொண்ட அவன், எலும்பும் தோலுமாய், தாடி, மீசை முகத்தை மறைக்க, சதைபோன மார்புடன், நடைபோன காலுடன் போகும் காட்சியைப் பார்க்கப் பார்க்க சத்யாவுக்கு, பார்வையே தேவையில்லை என்பது போலிருந்தது. அண்ணி பார்ப்பாள் என்பதையும் மறந்து, அவள் தாய்மையின் உந்தலில், அவனைத் தவிப்போடு பார்த்தாள். அப்போது வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த அண்ணிக்காரி,"ஏய்... மூதேவி. இன்னுமாடி அவன் நினைப்பு விடல... அவன் பொய் சத்தியம் பண்ணி பைத்தியமாய் மாறிட்டான்... ஒனக்கும் சீக்கிரம் பிடிக்கப் போகுது பாரு... எல்லாம் அந்த மனுஷன் கொடுக்கிற இளக்காரம்... வரட்டும்..." என்று சொல்லிவிட்டு, வெளியே போய்க் கொண்டிருந்தாள். மெய்யப்பன், அவளின் சத்தத்தால் திருப்பப்பட்டான். சத்யாவைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்துக் கொண்டான். சத்யா, கைகளைப் பிசைந்துகொண்டு, அவனைக் கருணை ததும்பப் பார்த்தது அவனுக்குத் தெரியவில்லை.

மெய்யப்பன் தன் அறைக்கு வந்தான். ஒருவனுக்குப் பைத்திய நிலைமை பிடித்துவிட்டால், சமூகமும் அவனிடம் பைத்தியக்காரத்தனமாகவே நடந்து கொள்கிறது என்றும், பிறர் மனதைப் புண்படுத்தும் பல அரைப் பைத்தியங்களால் தான் முழுப் பைத்தியங்கள் உருவாகின்றன என்றும் நினைத்து, வெறுமையாகச் சிரித்தான். தான் இன்னும் அறிவை இழக்கவில்லை என்பதில் ஒரு ஆறுதல். குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடக்கும் அறிவு ஒரேயடியாய் போய்விட்டால் நிம்மதி என்ற நினைப்பு. இப்போதும் விமலா அவன் மார்பில் புரண்டு அழுத கண்களோடு, அவன் தலையைக் கோதிவிடுவதுபோல் ஒரு பசுமையான எண்ணம்...

திடீரென்று, அன்று பாலைவனமானான்... இவ்வளவுக்கும் காரணமான விமலாவை இன்னும் மறக்க முடியாமல் தவிக்கும் மனதை கொன்றுபோடப் போவது போல் உறுமிக் கொண்டான். அலுவலகத்தில் தன்னை எதிரியாக நினைக்கும், பச்சாதாபமில்லாத ஒருத்திக்காகத்