பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113 வெளிச்சத்தை நோக்கி...


மெய்யப்பன் வீறிட்டுக் கத்தினான்: "அய்யோ ஸார்... சத்யாவை விட்டுடுங்க... விட்டுடு... டேய் விட்டுடு... சத்யா... சத்யா... அய்யோ சத்யா..."

திடீரென்று, சத்யா வீட்டில் விளக்கு எரிகிறது. அண்ணிக்காரி, பயங்கரமாகக் கத்துகிறாள். கதவு பயங்கரமாகத் தட்டப்பட்டது. மெய்யப்பன், கதவைத் திறந்தான். சத்யாவின் அண்ணனும், அண்ணியும் கோரமான கோபக் குறிகளோடு நிற்பது தெரிகிறது.

அண்ணன்காரன், மெய்யப்பனின் தலைமுடியைப் பிடித்து, வாசலுக்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்து, "என்னடா நினைச்சிக்கிட்டே... நடுராத்திரில... என் தங்கையை கூப்புடுற அளவுக்கு... திமுறாடா... நாய்ப் பயலே...ஒன்னை... ஒன்னை..." என்று உறுமிக் கொண்டே, மெய்யப்பனை அடிக்கப் போனான். அவன் மனைவி, அவனைத் தடுத்துவிட்டு, ஜன்னல் கம்பிகளில் முகம் சாய்த்து நின்ற சத்யாவைப் பார்த்தபடியே கத்தினாள்.

"பேயனை விடுங்க... எல்லாம் அவள் கொடுத்த இடம்...அவள்... இவன்கிட்ட முன்னால நடந்ததுல்லாம்... இவனுக்கு இப்போ ஞாபகத்துக்கு வருது... அடிக்காதிங்க... காலையில போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாம்... இந்த மாதிரி தடியனுக்கு... அந்த மாதிரி ஆளுங்கதான் லாயக்கு... இவ்வளவு நடக்குது... ஒங்க தங்கை, 'என்னை ஏண்டா... ராத்திரில கூப்பிடுறேன்னு கேட்கிறாளா பாருங்க... அவளை... புருஷன் வீட்ல கொண்டு விடுங்கன்னு எத்தனை தடவை சொல்லிட்டேன்? அவன் தலையை விடுங்க... நம்ம கெட்ட காலம், உயிரு போயிடப்போவுது... போலீஸ் எதுக்காக இருக்கு?"

அண்ணன்காரன், மெய்யப்பனை, அவன் அறை வாசலுக்குள் தள்ளிவிட்டு, “காலையில... ஒன்னை கவனிச்சுக்கிறேன்..." என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் போய்விட்டான். "எல்லாம்... இந்த மூதேவி கொடுத்த