பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வெளிச்சத்தை நோக்கி...


செருப்புக்களை கால்களால் ஓசைப்படாமல் தூக்கி, மாட்டிக்கொண்டு தரையில் செருப்பு உரசாதபடி நடக்கப்போனாள்.

மானேஜர் அறைக்கு எதிரே அமர்ந்திருந்த குமார், எழுதிக் கொண்டிருந்த ரிஜிஸ்டரை எரிச்சலோடு எறிந்து விட்டு, சட்டைக் காலரைத் தூக்கியபடி, மார்புக்குள் 'பூ' என்று ஊதினான். வெள்ளை யூனிபாரம் போட்ட பியூன் முனுசாமி, யூனிபாரத்தைக் கழற்றி வைப்பதற்காக, 'ஸ்டோர் ரூமைப்' பார்த்துப் போய்க் கொண்டிருந்தான். டைப்பிஸ்ட் மங்கைகளான கனகமும், மீனாட்சியும், 'இன்னுமா புறப்படல.' என்பது மாதிரி தத்தம் காதல் ரத்தினங்களான சந்தானத்தையும், சற்குண பாண்டியனையும் எரிச்சலோடு பார்த்தார்கள். அக்கெளண்டன்ட் பாஷ்யம்-ஐம்பதைத் தாண்டியவர்-பேர்தான் பழசே தவிர, அவருடைய கிருதா புதுசு. "கனகு செத்தே வா- இந்த ஸ்டேட்மெண்டை 'கம்பேர்' பண்ணலாம்" என்றார். சின்ன வயதில் காதல் அனுபவம் இல்லாதவர். ஆகையால் யார் காதல் வயப்பட்டாலும், அவர்களைப் படாதபாடு படுத்தி விடுவார். கனகம், குனிந்த தலை நிமிராதது போலிருந்த பாஷ்யத்தைப் பார்த்து, மோவாயை இடிப்பது போல் முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டே போனாள். இதற்குள் நாலே முக்கால்-ஐந்து மணிக்கு முன்னதாகவே விரிந்த தலையோடு, கலைந்த கோலத்தோடு 'டாய்லட்' அறைக்குப் போன சில ஊழியைகள், இப்போது ஐந்தே கால் மணிக்கு, மேக்கப்போடு திரும்பி, அறைக்கு வெளியே நின்றுகொண்டே, உள்ளே நோட்டம் பார்த்துவிட்டு, புறப்படப் போனார்கள். அதாவது அவர்கள் நாலே முக்கால் மணிக்குக் கிளம்பலியாம்- இப்போ ஐந்து இருபதுக்குத்தான் கிளம்புகிறார்களாம்.

திடீரென்று வெளியே நின்ற பெண்கள் சிரித்துக் கொண்டே உள்ளே வந்தார்கள். பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே, அலுவலகத்திற்குள் நுழைந்து, வாசல் பக்கம் குவியலாக நின்றார்கள். 'கேட்-