பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்தி்ம்

122


அசையாமல் அன்னையின் மார்பிலே அடைக்கலமான குழந்தைபோல முடங்கிக் கிடந்தான். பியூன் முனுசாமி கர்ஜித்தான்.

"ஸார்... இந்த ஆபீஸ்ல, நான் உட்பட...நீங்க உட்பட யாருமே யோக்கியமில்ல... அவரு ஸ்டேட்மெண்டைத் தான் கிழிச்சாரு... அந்த ஸ்டேட்மெண்ட்டுக்குள்ள எவ்வளவு 'பிராடு' உண்டுங்கறது... எல்லோருக்கும் தெரியும். இப்டி சொல்றது என் வேலையில்ல... ஆனால், என்ன செய்யுறது? ஒவ்வொருவரும் தங்களோட வேலைய மட்டும் செய்தால், நான் இதைச் சொல்லியிருக்க மாட்டேன்..."

"என்னையா பண்ணுவே?” என்றார் மானேஜர்.

முனுசாமி சாவகாசமாகச் சொன்னான்: "என்னை டிஸ்மிஸ் செய்யு முன்னால... மெய்யப்பன் ஸார...டிஸ்மிஸ் செய்ய முடியாது. டிஸ்மிஸ் ஆக நினைக்கிறவன், அதுக்காக, கையைக் காலைக்கூட முறிப்பான். அதிகாரத்தைக் காட்டி அபலைப் பெண்கள் கைகாலைப் பிடித்து மடக்கிற வங்களோட தலையை முறிக்கிறதுலயும் தப்பில்ல..."

மானேஜர் அவனை ஓரக் கண்ணால் பார்த்தார். இயல்பான உயிர்ப்பயம் அவரை உலுக்கியது. குரலில் அஹிம்சை பளிச்சிட்டது. "என்ன முனுசாமி... விஷயம் தெரியாமப் பேசுற...ஸ்டேட்மெண்ட் முழுசையும் கிழிச்சிட்டான்...போர்ட் மீட்டிங்கில பதில் சொல்ல வேண்டியது நீயா..? நானா?”

வாணி, மானேஜரை நிமிர்ந்து பார்க்காமல், மெய்யப்பனைப் பிடித்திருப்பதை விடாமல், பொதுப் படையாகப் பேசுவதுபோல், பேசினாள்.

"போர்ட் மீட்டிங் நடக்க இன்னும் இரண்டு நாள் இருக்கு... எல்லா ஸ்டேட்மெண்டையும் நான் அடிச்சுக் கொடுத்துடுறேன்..."