பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

வெளிச்சத்தை நோக்கி...


பிடுங்கித் தின்னும் அவமானத்துடன், மானேஜர் பல்லைக் கடித்துக் கொண்டே கேட்டார்: "அம்மா, எவ்வளவு நாளாய் பரோபகாரியாய் மாறுனிங்க?"

"பரோபகாரியாய் இருந்தவன் பைத்திய நிலைக்கு வந்த போது, பைத்தியமாய் நடந்துகிட்ட நான் பரோபகாரியாய் மாறிட்டேன். அவனுக்கே இதுன்னால், மற்றவங்களுக்கு என்ன கூலியோ..?”

"ஷட் அப்."

"சரிதான் போங்க ஸார்...இனிமேல்... தரக்குறைவாய் நடந்து கிட்டாலோ..., இல்ல பேசினாலோ.... நான் ஷட் அப்னு நாகரிகமாய் பேசமாட்டேன்... ஞாபகம் இருக்கட்டும்..."

மானேஜர் சுயமரியாதை உணர்வுக்கும், அவமரியாதை உணர்வுக்கும் இடையே அல்லாடியபோது, பாஷ்யம் பல்குழையப் பேசினார். 'எதுக்கு வீண் வம்பு... லோகத்துல... ஒருத்தனோட கெட்ட நேரம்... அவனுக்கு உபகாரம் செய்ற வாளுக்கும் வரும். அதனால... அவனை வச்சிருக்கதும் தப்பு... வைக்காமல் விடுறதும் தப்பு...நான் என்ன சொல்றேன்னா. பேசாம... மிஸ்டர் மெய்யப்பனை ஒரு மாதம் கம்பெல்ஸரி லீவ்ல அனுப்புவோம்... அப்புறம் பார்த்துக்கலாம்... இதனால பாம்பும் சாகாது, பாம்படித்த கம்பும் நோகாது பாருங்கோ..."

மானேஜர், பாஷ்யம் சொல்வதை, அங்கீகரிப்பதுபோல், மெளனமாக நின்றார். பிறகு, "வாணி... ஐ அம் ஸாரி... மிஸ் விமலா... என் ரூமுக்கு வாங்க. கம்பெல்ஸரி லீவுக்கு ஒரு டிக்டேஷன் கொடுக்கிறேன். வாரீங்களா..?" என்றார்.

மானேஜர், அவமானத்தை மறைக்க விரும்புபவர் போல், அவசர அவசரமாக அறைக்குள் போனார். அவர் போன ஐந்து நிமிஷத்திற்குள் மிஸ். விமலாவும் நோட்ஸ் புத்தகமும் கையுமாக உள்ளே போனாள்.

அரைமணி நேரத்திற்குள், மெய்யப்பனைக் கம்பெல்ஸரி லீவில் அனுப்பும் 'மெமோ' டைப் அடிக்கப்பட்டு, அவனிடம் கொடுக்கப்பட்டது. மெய்யப்பன், அதை வாங்கி, கிழிக்கப்