பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

சு.சமுத்திரம்


போனான். முனுசாமி தடுத்துவிட்டான். இருக்கையில் இருந்தபடியே, விமலாவுடன் கடற்கரைக்கும், கிராமத்துப் பள்ளிக் கூடத்திற்கும், அரசியல் மேடைகளுக்கும் இப்படி எங்கெல்லாமோ போய்க் கொண்டிருந்த மெய்யப்பன் கையில், பாஷ்யம் சம்பளத்தைக் கொடுத்தார். அவன் அதை எண்ணாமலே, பைக்குள் வைத்துக் கொண்டான்.

பியூன் முனுசாமி அவனைச் செல்லமாக அதட்டினான். "வா ஸார்... ஒரு ஆட்டோவுல கொண்டு போய் விடுறேன்...எய்ந்திரு ஸார். ஏன் ஸார் கலங்குறே... இன்னா ஸார் நடந்துட்டு. நீ லீவ்லதான் போறே... நீ நல்லபடியாய் மாறி, பழையபடி வரத்தான் போற... அப்போ ஒரு சிலர், லீவ் போடவேண்டிய அவசியம் இல்லாமல், ஒரேயடியாய் போயிடுவாங்க... நட ஸார்...நிமிர்ந்து நட ஸார்...ஒரு பாவமும் செய்யாத பைத்தியமாக்கப்பட்ட ஒனக்கே இந்த நிலமைன்னா... ஒன்னை பைத்தியமாக்கினவங்களுக்கு என்ன நிலையோ... ஒன்னை நம்பக்கூடாது ஸார். அப்போகூட, நீ அவங்களுக்கு உதவுவே. நட ஸார்... அட அழுவுறதப் பாரு... ஒன்னோட ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும், சிலருக்கு ஒவ்வொரு துளி ரத்தமாய் வரப்போவுது ...என்ன யாருக்கும் சாபம் போடாண்டாமா... சரி போடல. நீ இப்போ நடந்தியான்னா. சாபம் கொடுக்கல... உம், அப்படித்தான் நடக்கணும்..."

பாஷ்யம் குறுக்கிட்டார். 'டேய் முனி... அவரை அழக்கூடாதுன்னுட்டு, நீ... ஏண்டா அழுவுறே...?"

முனுசாமியும், மெய்யப்பனும் போவதைப் பார்த்துக் கொண்டே நின்ற வாணி, கண்ணீர் விடாமல், சத்தம் போடாமல், முட்டாமல், மோதாமல், தனக்குள்ளே அழுதாள். முனுசாமி, விமலாவுக்குத்தான் சாபம் கொடுத்தான் என்றாலும், சாபம் என்பது, அவனைப்போல் வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்காது என்பதைப் உணர்ந்தவள்போல், தனக்குள்ளே மருகினாள். நல்லவர்களின் சாபம் என்பது, தர்மத்தின் கோபமாயிற்றே.