பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 வெளிச்சத்தை நோக்கி...

குழாயில் தண்ணீர் வராதபோது கிணற்றில் நீரெடுக்க வாளியுடன் வாங்கிப்போட்ட கயிறு, கிணற்றில் இருந்து நீரை மேலே கொண்டுவர உதவிய கயிறு, இப்போது அவன் உடலில் இருந்த உயிரை எடுத்து, 'மேலே' கொண்டுவரப் போகிறது. 'வர' அல்ல. போகப் போகிறது.

மெய்யப்பன், முன்பு பாடைபோல் தோற்றங்காட்டிய கட்டிலுக்கு அடியில் குனிந்து, செம்மண் நிறத்தில், சாரைப் பாம்புபோல் சுருண்டு கிடந்த கயிற்றை எடுத்தான். ஒரு முனையில் சுருக்குப் போட்டு, இன்னொரு முனையை விட்டத்தில் கட்டினான். பிறப்பின் முனையில் இருந்து, இறப்பின் முனைக்குப் போகப் போகிறோம் என்ற இன்பதுன்ப எல்லையற்ற, சூன்யப் பெரும் பரப்பில் சுக்கிலமாய் மறையப் போவதை நினைத்துக்கொண்டான். உடல் பளுவால் கயிறு அறுந்துவிடுமோ என்று,அதற்கு மட்டுமே அஞ்சியவன் போல், கயிற்றை இழுத்துப் பார்த்தான். அறுபடாது. உடம்பு இளைத்துப் போனதும், எடை பாதிக்கும் கீழே பாதிக்கப்பட்டதும் நல்லதாய் போயிற்று. இதனால்தான், 'எல்லாம் நன்மைக்கே' என்கிறார்களோ... அவன் இழுத்த வேகத்தில் கயிறு ஆடியது. கீழே தொங்கிய வட்டச் சுருக்கு பலூன் மாதிரியும், அதுதான் வாழ்க்கை போலவும் தோன்றியது. வாழ்க்கையும் ஒரு பலூன்தானே... கீழே தொங்கிய சுருக்கும், சுருக்குக்குப் போடப்பட்ட முடிச்சும், குழந்தை தொட்டிலில் ஆடுவதுபோல் காட்டியது. மரணத் தொட்டில், இறப்பம்மா தாலாட்டப் போகும், பெரும் தூக்கத் தொட்டில்.

கட்டிலில் ஏறி, சுருக்குக்குள் கழுத்தை நுழைக்கப் போனவன், திடீரென்று கீழே குதித்தான். கீழே கிடந்த ஒரு குப்பைக் காகிதத்தை எடுத்து 'என் மரணத்திற்கு நானே காரணம்... வேறு எவருமல்ல... உணர்வுகளால் 'புலன் விசாரிக்கப்பட்டு' உயிரை விட்டவன். என் மரணத்திற்குப் புலன் விசாரணை செய்ய வில்லையானால், அதுவே இந்த எனக்கு, இறந்த பிறகாவது செய்யும் உதவி என்று தன்