பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 வெளிச்சத்தை நோக்கி...

அன்று குளியலறைக்குப்போன வேகத்திலேயே, குளிக்காமல் அவன் திரும்பிய தோரணையைப் பார்த்த வளுக்கு, மீண்டும் அவன் மரணப்பிடிக்குள் சிக்கப் போகிறானோ என்று பயம் வந்தது. அண்ணிக்குத் தெரியாமல், ஜன்னல் வழியாக ஜாடைமாடையாகப் பார்த்தபோது, அவன் கட்டிலுக்கடியில் எதையோ தேடுவது போலிருந்தது. அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. அண்ணி கூப்பிட்டாள், அல்ல, 'கூப்பாடு' போட்டாள்.

பாதிவழி வந்தவள், மீதி வழியையும் கடந்து, ஜன்னல் வழியாக அவனைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குள் ஓடினாள். ஓடிய வேகத்தில் ஊனக்கால் மேலும் தேய்ந்தது போலிருந்தது.

நல்லவேளையாக, மாலையில், அண்ணிக்காரி கோவிலுக்குப் போய்விட்டாள். வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். கோவிலில் விழுந்து விழுந்து கும்பிடுகிறவள். முன்பெல்லாம், பெரும்பாலும், குரோதமும் விரோதமும் உள்ளவர்கள்தானே அதிகமாகக் கோவிலுக்குப் போகிறார்கள் என்று கோவில்கள் மீதே வெறுப்படைந்த சத்யா, இப்போது ஞானம் பெற்றவள்போல், கோவில்களைக் கண்முன் நிறுத்தி, மானசீகமாகக் கையெடுத்துக் கும்பிட்டாள். கோவிலில், ஆண்டவன், குரோதிகளையும் தன்னிடம் வரவழைத்து, அந்தச் சமயத்தில், அந்த குரோதிகளைச் சார்ந்தவர்களுக்கு சுகமளிக்கிறான். நல்லவர்கள் தன்னிடம் வர நினைத்தால் அவர்களால் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் தடைபடக்கூடாது என்று நினைத்து, அவர்களை வரவழைக்காமல் அருள் காட்டுகிறான்...

சத்யா, தன்னுள் எழுந்த சிந்தனையால், மெல்லச் சிரித்து, வெளித் தளத்தில், தேக்குத் தூணில் சாய்ந்து கொண்டே, பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். அண்ணி வந்ததும், வீட்டுச்சாமிக்குப் பூ சாத்துவாள்.