பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 135

பார்வையை ஊடுருவி அதற்கு உள்ளே இருந்ததை உணர்ந்தவர்போல், மெதுவாகப் பேசினார். "கவலப் படாதம்மா, ஒன் கஷ்டகாலம் தீரப்போவுது... ஒன் புருஷன்கிட்ட ஒன்னை சேர்க்கணுமுன்னு நான் விபூதி கொடுக்கல... ஒனக்கு எந்த வகையிலேயோ... ஒரு வகையில மேலான வாழ்வு வரணுமுன்னுதான்... விபூதி கொடுத்தேன்... அந்த வாழ்க்கை... புருஷன் இல்லாமல் கூட வரலாம். உதறுகிறவனை ஒதுக்குகிறவர்தான் உண்மையான பத்தினி. கவலைப்படாதே... பத்தினித்தன்மை என்பது கணவன் உறவோடு சம்பந்தப்பட்டது அல்ல... தன்னோடு மட்டுமே சம்பந்தப்பட்டது... நான் வரட்டுமாம்மா..."

சத்யா ஓரளவு துணுக்குற்றாள். இப்போதெல்லாம், தனக்குக் கணவரிடம் போகப் பிடிக்கவில்லை என்பதை எப்படிப் புரிந்து கொண்டார்? முதியவர் நகரப் போனார். சத்யா, தயக்கத்தோடு, அவரைப் பார்த்தாள். அவரே கேட்டார்:

"என்னம்மா யோசிக்கிற...?"

"ஒண்ணுமில்ல... இந்த ரூம்ல... ஒருவர் இருக்கார். சின்ன வயசு... நல்ல மனுஷர்.. அம்மா என்கிற சொல்லுக்கு அடுத்த சொல் அறியாத மனுஷர். ரெண்டு மாசமா மூளைக் கோளாறுல தவிக்கார். நான்... எனக்கே கூட கேட்டதுல்ல... அப்பாகிட்ட மகள் கேட்கவேண்டியதும் இல்ல..."

பெரியவர், மீண்டும், மூக்கில் பெருவிரல்பட, ஆள்காட்டி விரல் நெற்றியை வருட, மூச்சு விட்டார். பிறகு, "சரி... வா... போய்ப் பார்க்கலாம்...” என்றார். இருவரும் உள்ளே போனபோது, மெய்யப்பன் கண் விழிக்காது முடங்கிக் கிடந்தான். பெரியவர் அவனையே பார்த்தார்.

மெய்யப்பன் மலங்க மலங்க விழித்துக் கொண்டே பார்த்தான். எழுந்திருக்கப் பார்த்தான். முடியவில்லை. பெரியவர், அவனைக் கையமர்த்திவிட்டு, விபூதியை எடுத்து அவனிடம் நீட்டினார். அவன், அதை வாங்கலாமா