பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

143


வந்து, அவன் கழுத்தைக் கடிக்கிறாள். மார்பைப் பிளந்து, அவன் ரத்தத்தைக் கோதி, தன் தலையில் தேய்க்கிறாள்.

மெய்யப்பன் உயிர் வாதையில் துடித்தான். முருகப் படங்களை எடுத்து வீசியெறிவதற்காக எழுந்தான். உடனே, வேல் பாயும் என்ற பயம். மயில் கொத்தும் என்ற அச்சம்..... அவனுக்கு சத்யாவின் மீதும் பயங்கரமான கோபம் வந்தது... சாமியார் மீதும் ஆத்திரம் வந்தது... அன்று இரவு அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதற்காக, பழிவாங்கும் எண்ணத்துடன் இருவரும் போட்ட திட்டமாக இருக்குமோ....?

'இருக்கோ... இல்லையோ... நான் இருக்கக்கூடாது... முருகனே கைவிட்டபோது உயிர் வாழ்வது அர்த்தமற்றது... கைவிட்டால் கூட பரவாயில்லை. கைவேலால் குத்தும்போது வாழ்வது அபத்தம். முருகா, பந்தயத்துக்கு வாரியாடா... ஒன்னால என்னைக் குத்த முடியுதான்னு பார்ப்போமா... நீதான் தோற்கப் போறே... நான் உயிரோடு இருந்தால்தானே நீ குத்துவே... செத்திட்டால்... செத்திட்டால்... நான் தோற்றுச் சாகிறவன் இல்லே... செத்து ஜெயிக்கிறவன்... பார்க்கலாமா....'

மெய்யப்பன் தாம்புக் கயிற்றை எடுக்கத்தான் போனான். உடம்பை அசைக்க முடியவில்லை. கையை நீட்ட முடியவில்லை. அப்படியே ஜன்னல் சுவரில் சாய்ந்தபடித் தூங்கிப் போனானோ... மயங்கிப் போனானோ...

காலையில், யாரோ தன்னை உலுக்குவதை உணர்ந்து, கண் விழித்த அவன், குமாரைப் பார்த்தான். இரண்டு மாதத்திற்குப் பிறகு வந்த நண்பனுக்கு, குடிப்பதற்காகவாவது கொடுக்க வேண்டும் என்பதுபோல் கண்கள் நீர் கொட்டின. குமார் அவனை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டான். மெய்யப்பன் மெதுவாக முணு முணுத்தான்.

'டேய் குமார்! என் நிலைமையைப் பார்த்தியா...? அன்றைக்கு நீ சொன்னது ஞாபகம் இருக்கா...? மெய்யப்பா...நீ இப்டி உட்கார... உட்கார... ஒரேயடியாய் எழுந்திருக்க முடியாமப் போயிடுவேன்னு சொன்னே பாத்தியா...? நான்