பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 147

இருந்தது. உடல் கோளாறுகளுக்குக்கூட டாக்டரிடம் போகாதவன், கடைசியில் இந்தக் கோளாறுக்கு வர வேண்டியதிருக்கிறதே என்று நினைத்து, வெளியே பார்த்தான். ரகுராமன் நிதானமான குரலில், "சரி... நான் சொன்னது மாதிரி எழுதிக் கொண்டு வந்திருக்கங்கல்லா... கொடுங்க மிஸ்டர்... குமார்! அவரே கொடுக்கட்டும்..." என்று சொன்னபோது, மெய்யப்பன், கையாட, மெய்யாட, கண்ணாட, தான் எழுதிய காகிதக்கட்டை அவரிடம் நீட்டினான்.

இதற்குள், உள்ளறையில் இருந்து, இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்தாள். கருணையே உருவானது போல் இல்லையானாலும், கருணையால் உருவாக்கப் பட்டவள்போல் தோன்றிய அந்தப் பெண், 'பேஷண்ட் யார்' என்பது மாதிரி, மெய்யப்பனையும், குமாரையும் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு, கண்டுபிடிக்க முடியாதவள்போல் கணவனைப் பார்த்தாள். அவர், அவளை அறிமுகம் செய்து வைத்தார்.

"மீட் மை ஒய்ப். இவங்க, என்னோட கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட். இவரு, மிஸ்டர் குமார். இவர், மிஸ்டர் மெய்யப்பன். இவருக்குத்தான்..."

அவள் மெய்யப்பனைச் சிறிது உற்றுப் பார்த்தாள். அவன், சங்கடப்பட்டவன் போல் கூரையைப் பார்த்தான். 'போயும் போயும், ஒரு இளம் பெண்ணிடம்'.... மெய்யப்பன், மீண்டும் அவளைப் பார்க்க, அவள், "இதெல்லாம் சகஜம், மிஸ்டர் மெய்யப்பன், ஒங்களுக்கு வந்தது நாளைக்கு எனக்கும் வரலாம். என்" ஹஸ்பெண்டுக்கும் வரலாம். மனநோய், தலைவலி வயிற்றுவலி மாதிரி... யாருக்கு வேண்டுமானாலும். எப்போது வேண்டுமானாலும் வரலாம்.... இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை" என்று சொன்ன போது, பள்ளிக்கூடத்தில், சரஸ்வதி பூஜையின் போது, ஓம் சரஸ்வதி தேவி நமா... ஸ்ர்வரோக பாப நிவாரணி நமா...' என்று சொன்ன சொல்லும், சொல்லுக்குரியவளின் படமும் நினைவுக்கு வந்து, அவன் நெஞ்சை நெகிழ வைத்தது. அந்தப்