பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 149


இல்லை... இவருக்கு இந்த மாதிரியான உணர்வு வரும்போது..., அந்தச் சமயத்திலயும் அது போலின்னு தெரியுது... அது வேண்டாத நினைவுன்னும் தெரியுது... அறிவு அழிக்கப் படாமலே, அதுக்கு மேலதான் பிரமைகள் படர்கின்றன..."

"அப்படின்னா...கம்பல்ஸிவ் நெரோஸிஸ்னு சொல்றீங்களா... அதாவது ஷேக்ஸ்பியரோட லேடி மேக்பத்துக்கு வந்தது மாதிரி... ஸாரி... அவளுக்கு வந்தது சிசோபிரினியா (Schizophrenia) இவருக்கு வந்திருப்பது வேற..."

"கரெக்ட்... ஸ்கிஸோபிரினியா கேஸ்ல... ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் வித்தியாசம் தெரியாது... கம்பல்ஸிவ் நெரோஸிஸ்ல தெரியும்...மெய்யப்பன், தண்ணீரைக் குடிக்கும் போது, அது தண்ணீர்னு தெரிந்து. குடிக்கவும் செய்கிறார். அதேசமயம், அக்கினித் திராவகம் நினைப்பு வருது... ஒன்றைப் பார்த்து ,இன்னொன்றை இணைக்கிறார். இந்த இணைப்புக்கள் விபரீதமானவை... இவர் சிறு வயதிலேயே, வில்லுப்பாட்டு பாடியிருக்கார்... கதை எழுதியிருக்கார். இயல்பிலேயே கலைப்போக்கு உள்ளவர். சின்ன வயதிலேயே அம்மா இறந்ததாலயும். மற்றதாலயும். பீலிங் ஆப் இன்செக்யூரிட்டி... பயப்பிராந்தி ஏற்பட்டிருக்கு... அடுத்தடுத்து... இது சப்கான்ஷியஸ் மைன்ட்ல வலுப்பட்டுட்டு...பயம், கற்பனையோடு கலந்தால் என்ன ஆகும்? கற்பனை விதவிதமான பயங்கரங்களைக் கற்பித்து, பயங்கள் கற்பனையைப் பெருக்கிடும்... அதிலும் கலைப்போக்கு உள்ளவருக்கு, பயம் பிடித்தால், கற்பனை பயம் சிறகடித்துப் பறக்கும்... இதுதான் இவரோட கேஸ்..."

இ ன் னும் எ ன க் கு . . . இது சிசோபிரினியா (Schizophrenia) மாதிரிதான் தோணுது. பட்... இப்போ நீங்க பாஸ்... ஹஸ்பெண்ட் அல்ல. எதிர்த்துப் பேச... ஓ.கே. என்ன சிகிச்சை செய்யலாம்... பிஹேவியர் தெராபி கொடுக்கலாமா...?

“தேவையில்ல... ஹிப்னாடிஸ் முறை போதுமுன்னு நினைக்கேன்..."