பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

வெளிச்சத்தை நோக்கி...

ரகுராமன் அவன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நினைத்தார். “நானும் ஜோக்தான் அடிச்சேன்; நீங்க அப்நார்மலாய் நடந்துக்கல... நடந்தாலும் தப்பில்ல... மனோதத்துவத்தின் அடிப்படை விதியே... 'தி நார்மல் திங் இஸ்... எவரிபடி இஸ் அப்நார்மல்'.... என்பதுதான்... ஒவ்வொருவரும் மாமூல் நிலைக்கு வித்தியாசமானவங்க என்பதுதான் மாமூல் விதி... அதை விடுங்க... மெய்யப்பன் உறுதியானவர்னும்.., கலகலப்பானவர்னும் சொன்னீங்க... சந்தோஷம்... பட் நீங்க நம்புற அந்த உறுதி, ஆண்மைக் குறைவானவன். நாலுபேர்கிட்ட, செக்ஸ் சமாச்சாரங்களைப் பேசுறது மாதிரி... தாழ்வு மனப்பான்மையுள்ளவன், எல்லாரையும் விரட்டுறது மாதிரி. புரியுதா...? ஹிட்லர், ஒங்களுக்கு ஒரு அராஜகவாதி... ஆனால், மனோதத்துவப்படி.., பயந்தாங்கொள்ளி... அவன் ஆஸ்திரியத் தெருக்களில், இளம் வயதில் பட்ட கஷ்டங்களால், பயந்தாங்கொள்ளியானவன். அடிமனதில் பயப் பிராந்தி அப்பியவன். பயவாதி, பயங்கரவாதியாய் மாறலாம். செக்ஸ் பர்வர்டாய் மாறலாம். விமலா மாதிரி, மனச்சாட்சி இல்லாத சேடிஸ்டாய் மாறலாம். மெய்யப்பன் ஜென்டில்மேன்... அதனாலர... இப்படி மாறிட்டார்... எத்தனையோ பேருக்கு காதல் தோல்வி வந்திருக்கு... குடும்பத் துரோகம் நடந்திருக்கு... எல்லோரும் மெய்யப்பனாவா மாறியிருக்காங்க..? ஓ.கே. கிளாஸ் எடுத்தது போதும்... ஹிப்னாடிஸ் சிகிச்சை கொடுக்கப் போறேன்... நீங்க வெளியில போய் உலாத்துங்க... இல்லன்னா வரவேற்பு அறையில் போய் உட்காருங்க..."

குமார், இருக்கையைவிட்டு எழுந்துகொண்டே, ரகுராமனின் மனைவி, ரமாவைப் பார்த்தான்... அவள், கணவனைவிட, புத்திசாலி மாதிரித் தெரிந்தது... எதையும் சந்தர்ப்பத்திடம் விடத் தயாராக இல்லாதவன்போல் பேசினான்; "அம்மா... ஏதோ வேற சிகிச்சை கொடுக்கலா முன்னும், ஹிப்னாடிஸ் பத்தாம் பசலின்னும் சொன்னது மாதிரி.... ஸாரி... ஸார். சும்மா.., ஒங்களுக்கு ஞாபகப் படுத்தினேன்... அவ்வளவுதான்..."