பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

வெளிச்சத்தை நோக்கி...

குத்துறாள். 'பண்ணையார் மகனையா... வயித்துக்குக் கஞ்சி ஊத்துற மகராசன் மகனையாடா... அடிக்கேன்'னு கேட்டு அடிக்காள். அப்புறம் என் முகத்துல, காறித் துப்புறாள். பாட்டியும், பண்ணையாரம்மாவும் போகிறாங்க..... பண்ணையார் மகன், மத்த பசங்ககிட்ட போய் நின்னுகிட்டு என்னை இளக்காராமாய் பார்க்கான். எல்லாப் பசங்களும், என்னைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே போறாங்க... பாட்டி திரும்பி வந்து, 'வீட்டுக்கு வந்தியானால், செருப்படி படுவே. எங்கேயாவது ஓடிப்போ'ன்னு சொல்லிட்டுப் போறாள். நான், தனியாய் தவித்து தனியாய் நிக்கேன், அழமுடியாமல் அழுவுறேன். அம்மா, நீ இருந்தால், யாரும் என்னை இப்படி அடிப்பாங்களா? அப்பா, நான் பிறக்கு முன்னாலயே எதுக்காக செத்தே? நீ இருந்தால், பரமசிவம் அடிப்பானா...? பண்ணையாரம்மா மிதிப்பாளா...? அம்மா... அம்மா... எங்கம்மா போனே...?"

"சரிப்பா, இப்போ ஒனக்கு ஆறு வயசு, அம்மா இருக்காங்க. அம்மா சம்பந்தமாய் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லு..."

"சாயங்கால நேரம். பாட்டிக்கும், அம்மாவுக்கும் சண்டை...தப்பு.... சண்டைன்னா ரெண்டு பேர் வேணுமே... சண்டையில்ல. பாட்டி, அம்மாவைத் திட்டுறாள். தாத்தா திட்டுறார். எதுக்குன்னு புரியல. இவ்வளவுக்கும் என் அம்மா, கோழி கூவுறதுக்கு முன்னால வயலுக்குப் போயிட்டு, ஆந்தை அலறுற சமயத்தில வீட்டுக்கு வாரவள்... அன்றைக்கு அம்மாவுக்கு சுகமில்லை... வயலுக்குப் போகலன்னு பாட்டி திட்டுறாங்கன்னு நினைக்கேன். திடீர்னு, பாட்டி, அம்மாவை அடிக்காள். அம்மா, அழாமலே வேகமாய் நடக்காள். நான் பின்னால் ஓடுறேன். அம்மா என்னைத் திரும்பிப் போகச் சொல்லுறாள்... நான் நிற்கேன். ஒரு கல்லை எடுத்து எறியுறாள்... எனக்குக் கோபம் வருது. திரும்பிப் பாராம வீட்டுக்கு வாரேன். அப்புறம், நடு ராத்திரில அம்மாவைத் தூக்கிக்கிட்டு வாராங்க... சேலை முழுதும் நனைஞ்சிருக்கு... தலை முடியில சொட்டுச் சொட்டுன்னு தண்ணீர். அம்மா,