பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

161

கிணத்துல விழுந்து இறந்துட்டாள். என் அம்மா இறந்துட்டாள். அவளை எல்லோருமாய் சாகடிச்சிட்டாங்க."

"அப்புறம்...?”

"ராத்திரியோட ராத்திரியாய் அம்மாவை எரிக்கிறாங்க. நான் ராத்திரில ங்கும் போதெல்லாம், அம்மா வாராள், மடியில உட்கார வைக்கிறாள். முத்தம் கொடுக்காள்..'என் ராசா நான் இருக்கையில... ஒனக்கு என்னடா கவலை...' என்கிறாள். துாக்கம் கலைஞ்சு பார்த்தால் அம்மா இல்லை. அம்மா.. என் அம்மா என்னை பெத்தவளே... முன்னெல்லாம் நான் தூங்குற சமயத்துல... வயலுல இருந்து வருவே... ஒன்னைப் பார்க்க முடியாது... தூக்கம் கலைஞ்சால்தான் பார்க்கலாம்... இப்போ... தூக்கம் கலைஞ்சதும் போயிடுறே... தூங்கும்போது வாறே... ஏன் அம்மா... ஏன் அம்மா... அம்மா... நான் சொல்றதைக் கேளும்மா... முன்னை மாதிரி தூக்கம் கலைஞ்ச பிறகு ஒன்னை நான் பார்க்கணும்... ஆமாம்மா... அதுதாம்மா என் ஆசை... அம்மா.. எங்கம்மா போயிட்டே... என்னை விட்டுட்டு. அழவிட்டுட்டு... தனியாய் விட்டுட்டு, அனாதையாய் விட்டுட்டு... எங்கம்மா போயிட்டே.. அம்மா... அம்மா..."

"போதுண்டா.... அழுதது போதும்... இப்போ நீ இப்போதைய வயதுக்கு வாரே... இப்போ நான் கேட்டதோ... நீ பேசியதோ வெளி மனதில் வராது.. நான் பத்தில் இருந்து ஒன்று வரைக்கும் தலைகீழாய் எண்ணுவேன்... எண்ணி முடிப்பதற்குள் கண் விழிக்கணும்... பத்து... ஒன்பது... எட்டு... ஏழு..."

மெய்யப்பன், கண்களைக் கசக்கிக் கொண்டே, எழுந்தான். ரகுராமனைக் கூச்சத்தோடு பார்த்தான்.

"இப்போ எப்படி இருக்கு மிஸ்டர் மெய்யப்பன்?"

"ஏதோ கனவுல இருந்து மீண்டது மாதிரி இருக்கு ஸார்... பிரஷ்ஷா தோணுது..."

இதற்குள் குமாரும், ரமாவும் அங்கே வந்தார்கள். மெய்யப்பன், குமாரைப் பார்த்து, ஆசிரியரைப் பார்க்கும் அந்தக் காலத்து உயர்நிலைப்பள்ளி மாணவன்போல