பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

165

வீட்டில் அரைமணி நேரம் வரை ஆசனப் பயிற்சி. உடம்பின் உறுப்புக்களை மிகமிக மெதுவாக, அதேசமயம் உச்ச நிலை வரைக்கும் இயக்கியதில், மனதை எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம் என்று ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.

ரகுராமனின் சிகிச்சை, அவன் உள்ளத்தில், பைத்திய நிலைக்கு முன்புகூட ஏற்பட்டிராத அளவுக்கு ஒருவித சாந்தி நிலையைக் கொடுத்தது. அனைவரையும், அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி உறவாடுவதுபோல் வெளி மூச்சும், அவர்களின் உள்ளங்கள் தன் நெஞ்சத்துள் வருவது போன்று உள்மூச்சும், அவன் பிரச்சினையையும் துரத்தின. விமலா இப்போது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. வாணியைப் பற்றி நினைப்பே வரவில்லை. ஆனால், பாதாளம், பாய்லர் வகையறாக்கள் மட்டும் விருந்தாளி மாதிரி வந்து, விருந்து கசந்ததுபோல், போய் வந்தன. சத்யாவும், அவ்வப்போது அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாய் போய் வந்தாள்.

இதற்கிடையே, விமலா அபார்ஷனுக்காக மாத்திரை சாப்பிட்டு, அது வெளியே தெரிந்ததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு, அதுவும் வெளியே தெரிந்ததால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு, அதுவும் வெளியே தெரிந்து போலீஸ் விசாரணையில் இருப்பதாக, குமார் மகிழ்ச்சியாகச் சொன்னதை - முனுசாமி, குதித்துக் கொண்டே சொன்னதை - மெய்யப்பன் மெளனமாகக் கேட்டுக் கொண்டான். வாணி, இப்போது அவனைப் பார்க்கத் துடிக்கிறாள் என்று சொன்னபோது, அவனும், 'அப்படியா..? வரட்டுமே...' என்று கோபமோ, நட்போ இல்லாத குரலில் பதிலளித்தான். மானேஜர், வாணியின் உபயத்தால், ஏதோ ஒரு 'பிராட்' விவகாரத்தில் மாட்டிக்கொண்டு, சஸ்பெண்டாகி இருக்கிறார் என்று சொன்னபோது, மட்டும் திடீரென்று மகிழ்ச்சியடைந்தான். பிறகு அதையும் அடக்கிக் கொண்டான்.

அன்று சைக்கியாட்ரிஸ்டிடம் போவதற்காகப் புறப்பட்டான். இன்னும், எத்தனை 'செஷன்கள்' நடக்கும்